நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… தொடர்கதை-2 | விஜி முருகநாதன்
“க்குகூ... க்குகூ…” எப்போதும் போலவே அன்றும் குயில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அபர்ணா. கடிகாரத்தைப் பார்க்காமலேயே சரியாக மணி நான்கு என்று சொல்லிவிட முடியும். அவ்வளவு சரியாக, ஒரு நாள் தவறாது அந்த நேரத்திற்குக் கூவும். ஆச்சரியமாக இருக்கும்...