தமிழ் டு தமிழ்
அகிலமெங்கும் வாழும் தமிழர்களையும்,அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் கற்பனை வளங்களையும் ஒன்றினைக்கும் வகையில் தமிழ் டூ தமிழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தில் பிரபல எழுத்தாளர்களின் கதை,கவிதை,கட்டுரை மட்டுமின்றி, எழுத வேண்டும் என்கிற ஆவலோடு காத்திருப்பவர்களையும் கண்டறிந்து, அவர்களின் படைப்புகளை இதில் இடம்பெறச் செய்யும்.
தமிழர்களின் அறிவாற்றலை,பகுத்தாய்தலை,பரிணாம வளர்ச்சியை உலகறியச் செய்யும் பாலமாக விளங்கும்.
தாய் மொழியின் அவசியத்தை, மற்ற மொழிகளைக் காட்டிலும், தமிழ் மொழிக்கு உண்டான பெருமையை, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்தான கருத்தாய்வு, புதிய எழுத்தாளர்களுக்கான பயிற்சி, பரிசு,பாராட்டுச் சான்றிதழ் என தமிழ் மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்த உதவும்.
பிறமொழி பேசுபவர்களுக்கும், தமிழின் பெருமையை கொண்டு சேர்க்க பயிற்சி பட்டறை நடத்தப்படும்.
உலகின் மூத்த குடியான தமிழர்களின் தடங்களை தேடிச்செல்லும், சிறப்புப் பயணம் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும்.
மொத்தத்தில் தமிழ் டூ தமிழ்.காம், தமிழை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக அமையும்.
நிர்வாக ஆசிரியர்:
மதுரை ஒ.முருகன்.
ஆசிரியர்:
தமிழ் வேல்
இணைய முகவரி : www.tamiltotamil.com
மின்னஞ்சல் முகவரி : [email protected]
சென்னை.600 083. தமிழ்நாடு,இந்தியா.