2023 வருடத்தை ஐநாசபை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த சிறுதானிய வருடத்தைக் கொண்டாடும் விதமாக Dr. Chef.VK வினோத் குமார் தலைமையில் 100 வகையான உணவு வகைகளைச் செய்து பொங்கல் கொண்டாடியிருக்கிறார்கள். உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆரோக்கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவது இதுவே முதல் முறை.
சாய் இன்ஸ்டிடியூஸன் பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணரும், 25 ஆண்டுக்கும் மேலாகத் தனித்துவம் வாய்ந்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) தன் தனித் திறனை வெளிப்படுத்தி மஹாத்மா காந்தி, மகாகவி பாரதியார், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி , செல்வி.ஜெயலலிதா,
நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரின் உருவப் படத்தை வெண்ணெய் சிற்பமாக மிகவும் தத்ரூபமாக செதுக்கியவர். மேலும் அவர் உணவின் மூலம் ஆறு உலக சாதனைபளைப் படைத்தவர்.
அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆரோக்கியமான தானிய வகை பொங்கல்களை வழங்கி சாதனை படைத்துள்ளார்.
நேற்று (12-1-2023) காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சாய் நிறுவனத்தின் முன் Dr.Chef.V.K. (வினோத்குமார்) தலைமையில், மண் பானை விறகுகளுடன் கூடிய உலக சாதனை முயற்சியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆரோக்கியமான 100 வகை பொங்கல் சமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை அடையாறு துணை கமிஷனர் திரு. மஹேந்திரன், திரு. நிகில் முருகன், திருமதி. பிரியங்கா ரோபோ சங்கர், இந்திரஜிதா, நடன இயக்குநர் திருமதி ராதிகா ஆகியோர் கலந்து கொண்டார்
மாணவர்களும் பொதுமக்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்து கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். உலக சாதனை படைக்கும் இந்த முயற்சி வெற்றி பெற நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் செய்து காண்பித்த பொங்கல் வகைகள்
1.Broken wheat sweet Pongal 2.Yellow pumpkin sweet Pongal 3.Sweet potato sweet Pongal 4.Sarkarai Pongal 5.Wild rice sarkarai Pongal 6.Thinai sakkarai Pongal 7.Sweet Pongal 8.Jaggery sweet Pongal 9.Coconut milk sweet Pongal 10.Raw rice sweet Pongal 11.Moong dal rice Pongal 12.Pongal sweet rice 13.Temple sakkarai Pongal 14.Paal Pongal 15.Ven Pongal 16.Khara Pongal 17.Thuvaram Pongal 18.Andhra sweet Pongal 19.Oats Pongal 20.Koil Pongal 21.Thinai Pongal 22.Kalyana ven Pongal 23.Samba goudhumai Pongal 24.Sugar crystals Pongal 25.Ghee Pongal 26.Rava Pongal 27.Puli Pongal 28.Melagu Pongal 29.Multi millet Pongal 30.Iyer Pongal 31.Cooker Pongal 32.Foxtail millet sweet Pongal 33.Barnyard millet Pongal 34.Kette Pongal 35.Red rice Pongal 36.Sugarcane Pongal 37.Akkara Adisil 38.Sooji Pongal 39.Jeera Pongal 40.karupatti Pongal 41.palm candy Pongal 42.country sugar Pongal 43.acchu vellam Pongal 44. sabudana Pongal 45.Sabu sweet Pongal 46.chocolate Pongal 47.white chocolate Pongal 48.butterscotch Pongal 49.condensed milk sweet Pongal 50.samai Pongal 51.wheat daliya Pongal 52.dates Pongal 53.dry fruits Pongal 54.gurjrati Pongal 55.vegetable Pongal 56.paneer kara Pongal 57.bread Pongal 58.chef’s touch Pongal 59.fresh Pongal 60.Cadbury Pongal 61,bomboo rice Pongal 61,biryani Pongal 62.tutti frutti Pongal 63.coconut Pongal 64.banana sweet Pongal 65.strawberry sweet Pongal 66.rose Pongal 67.sugar syrup Pongal 68.vanilla sweet Pongal 69.pineapple sweet Pongal 70.masala Pongal 71.orange sweet Pongal 72.carrot Pongal 73,basmati Pongal 74.jeerga samba Pongal 75.cheese Pongal 76.oreo Pongal 77.cashew Pongal 78.badam Pongal 79.raisin Pongal 80.beetroot Pongal 81.chinese Pongal 82.jackfruit Pongal 83.vermicelli Pongal 84.chilli Pongal 85.onion Pongal 86.chickpea pongal 87.wheat Pongal 88.tomato Pongal 89.putina Pongal 90.corinder Pongal 91.soya milk Pongal 92.little millet Pongal 93.jaffana Pongal 94.noodles Pongal 95.pista Pongal 96.dark chocolate sweet Pongal 97.maggi Pongal 98.kaapa Pongal 99.milk maid Pongal 100.Pathaneer pongal