2 வயசு தான் ஆகுது. (22-6-2020) சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தேசிய கீதத்தை அழகாகப் பாடி அசத்துகிறது ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டி பாப்பா எம்.ஜி.சுஷ்மிதா. கொஞ்சும் மழலையில் பாடிய பாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் குவிகிறது.
வீடு முழுக்க பதக்கங்கள்.. கேடயங்கள்.. 2 வயதில் உலக சாதனை. கொஞ்சும் மழலை குரலில் ‘தேசிய கீதம்’ பாடி அசத்திய பாப்பா வீடியோ சமக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2 வயது குழந்தை சுஷ்மிதா, மழலை மொழியில் துருதுருவென பேசுவதில் ஆர்வம் காட்டியபோதே, சுஷ்மிதாவின் தாய் சக்தி, ஞாபக சக்தியை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்து, குழந்தைக்கு தேசிய கீதத்தையும், ஆங்கில எழுத்துக்களையும், சிறு சிறு வார்த்தைகளையும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.
குழந்தை சுஷ்மிதா ஞாபகமாக, அழகாக தேசிய கீதத்தைப் பாடியதைப் பாராட்டி, தேசிய புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட், இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன.
இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் தந்தை கோவிந்தன், தாய் சக்தி. இருவரும் குழந்தையிடம் பேசும்போது அதைத் திருப்பிச் சொல்வதில் சுட்டியாக இருந்திருக்கிறது குழந்தை. எந்தப் பாட்டையும் பாடியவுடனே வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டு குழந்தை சுஷ்மிதா அதேபோல் பாடியதைக் கேட்டு இந்த முயற்சியைச் செய்ததாகச் சொல்கிறார் குழந்தையின் தந்தை கோவிந்தன்.
நாமும் வியப்பில் ஆழ்ந்தோம். அதே கையோடு குழந்தைக்குப் பாராட்டையும், வாழ்த்தையும் கூறி விடைபெற்றோம்.