

எவ்வித பயமுன்றி விஷ பாம்புகளை பிடிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மற்றும் மாசி சடையன் இருவரும் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்கள். இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள் பாம்புகளைக் கையாள்வதில் வல்லுநர்கள். (பாம்புகளை பிடிப்பதற்கு எல்லாம் பத்மஶ்ரீயா என நீங்க நினைப்பது புரிகிறது ஆனா இவர்களுடைய சேவையை அமெரிக்க அரசே பாராட்டியது எனும்போது புரிந்துகொள்ள வேண்டும்.) பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர்.. ஆனால், இவர்களின் கைகளில் மட்டும் பாம்புகள் அடங்குகின்றன.
இருவரின் புகழ் உலகெங்கும் எட்டியது. கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் மலைப்பாம்புகள் தொல்லை அதிகரித்தது. இதனை சமாளிக்க வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் கூட்டணியை அமெரிக்கா அரசு உதவிக்கு அழைத்தது. அதன் பேரில் அமெரிக்கா சென்ற இருவரும் சுமார் 2 மாதம் தங்கியிருந்து 33 பாம்புகளை பிடித்தனர்.
அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற இவர்கள், தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையை பின்பற்றியே பாம்புகளை பிடித்து வருகின்றனர். நஞ்சு உடைய பாம்பை, தீரத்துடன் பிடிக்கும் வீரர்களுக்கு இன்று பத்மஸ்ரீ விருது கிட்டியுள்ளது.
புளோரிடா காடுகளில் பர்மிய பாறை மலைப்பாம்புகளைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் அமெரிக்க வனத்துறைக்குப் பயிற்சி அளித்து அவர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு உதவினார்கள். அங்கு இந்தப் பாம்புகள் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு இனமாக இருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த Chief Herpetalogist கூறுகையில், “இந்த மனிதர்களின் நிபுணத்துவத்தை, பாம்புகளைப் பற்றிய புரிதலை அமெரிக்கர்களால் ஒருபோதும் அடைய முடியாது” என்றார் அதுதான் உண்மையும் கூட.
கூட்டுறவுச் சங்கம் அமைக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ரோமுலஸ் விட்டேக்கரையும், வட தமிழகப் பகுதிகளில் உள்ள இருளர் பழங்குடியினருக்காகப் பணிபுரியும் பேராசிரியர் கல்யாணியையும் இந்த நேரத்தில் நாம் நினைவுகூர வேண்டும்.
அதே வேளையில் இளைய தலைமுறையினருக்கு பெரிதும் உதவும்.
விருது பெற்ற இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.