புதுடெல்லியில் உள்ள “குளோபல் எம்பயர் ஈவென்ட்ஸ்” என்ற அமைப்பின் சார்பில் “ஐகான்ஸ் ஆப் ஆசியா 2022” விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லி துவாரகாவில் உள்ள “ரேடிஸ்ஸன் ப்ளூ” ஹோட்டலில் இந்த விழா சிறந்த முறையில் நடந்தது.
இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முஹம்மதுவுக்கு “சிறந்த மென்பொருள் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த 38 நபர்களில் சிறந்த நபராக அசன் முஹம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. கல்வி, தொழில், பொதுத் தொண்டில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
விருது பெற்ற அசன் முஹம்மது தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றியை உரித்தாக்கினார். முக்கியமாக, தனது பொறியியல் கல்லூரிப் படிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்ய தனது உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த உதவிய அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்தார். அவருடைய சாதனை மென்மேலும் தொடர பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க : 95001 68656