உணவுச் சேவையில் ஆதி ரக்ஷா நல அறக்கட்டளை

1 0
Spread the love
Read Time:2 Minute, 6 Second

ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5 – 9) மற்றும் அன்னை தெரசா நினைவு நாளைப் பெருமைப்படுத்தும்விதமாக, சென்னை அயனாவரத்தில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை IMH-ல் புறநோயாளிகளுக்கும், நோயாளியின் உதவியாளர்களுக்கும் இன்று அரிசிக் கஞ்சி வழங்கினார்கள் ஆதி ரக்ஷா நல அறக்கட்டளையினர். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயனடைந்தனர்.

இவர்கள் இப்படி தினசரி தேவையைப் பொறுத்து வாரத்தில் 3 நாட்கள் விநியோகிக்க இருக்கிறார்கள்.

இது தவிர, இவர்கள் தினமும் 50 உணவுப் பொட்டலங்களை சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்கள். எச்.ஐ.வி. மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு அவர்களின் தேவைகளைப் பொறுத்து மாதாந்திர உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றையும் (ARWT) ஆதி
ரக்ஸா நல அறக்கட்டளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பில் தலைவர் என்.எஸ்.திருவம்பலத்திடம் பேசினோம்.

“இதுவரை சென்னை முழுவதும் 42,569 உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளோம். கடந்த நிதியாண்டில் நாங்கள் ரூ. 23 லட்சம் உணவுக்காகப் பொட்டலங்கள் வழங்கியுள்ளோம். இந்த ஆண்டுக்கான உணவுச் சேவைக்கு ரூ.30 லட்சம் தருவதாக உத்தேசித்துள்ளோம். அதாவது 2.5 லட்சம் செலவில் மாதாந்திர உணவுப் பொட்டலம் வழங்க இருக்கிறோம். உங்கள் பகுதிக்கும் உதவ உடனே அழையுங்கள், உங்களால் முடிந்ததை உதவுங்கள்” என்றார் திருவம்பலம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!