13-வது தேசிய வாக்காளர்கள் தினத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 25, 2023 அன்று தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 25ஆம் தேதியை, கடந்த 2011ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது
புதுதில்லியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்.
இந்த ஆண்டின் தேசிய வாக்காளர்கள் தினத்திற்கான பொருள் ‘வாக்களிப்பதைப் போன்று வேறில்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்’ என்பது.
புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘முதல் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது- இந்திய ஜனாதிபதி தேர்தல்களின் விளக்கப்படம்’ என்ற புத்தகத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ ராஜீவ்குமார் குடியரசுத் தலைவருக்கு வழங்குவார். நாட்டின் ஜனாதிபதி தேர்தலின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றிய பார்வையை இந்த புத்தகம், அதன் வகையான முதல் வெளியீடாகும்.
கடந்த 16 ஜனாதிபதித் தேர்தல்களின் காலக்கெடுவின் மூலம் ஜனாதிபதித் தேர்தல் முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியலமைப்பு விதிகளின் நுணுக்கங்களை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சுபாஷ் கை அறக்கட்டளையுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள பாடலான “மைன் பாரத் ஹூன்- ஹம் பாரத் கே மத்ததா ஹைன்” திரையிடப்படும். இந்தப் பாடல் வாக்களிக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறது. மற்றும் உலகின் மிகப்பெரிய மற்றும் துடிப்பான ஜனநாயகத்தில் உள்ளடங்கிய, அணுகக்கூடிய, நெறிமுறை, பங்கேற்பு மற்றும் பண்டிகை தேர்தல்களின் உணர்வைக் கொண்டாடுகிறது.
தேர்தல் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும்.
வாக்காளர்கள் விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த பங்களிப்பு செய்த அரசுத் துறைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள் அளிக்கப்படவுள்ளன.
தேசிய வாக்காளர்கள் தினம் தேசிய, மாநில, மாவட்ட தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்திய குடிமக்கள், வாக்காளர்களாக அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
அமைப்பின் திறன், நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மை மூலம் 17 மக்களவைத் தேர்தல்கள், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான 16 தேர்தல்கள், இன்று வரையிலான 399 சட்டசபை தேர்தல்கள் நிலை நாட்டப்பட்டுள்ளது. 400வது சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
குடிமக்கள் தங்கள் கடமையின் ஒரு பகுதியாக, வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளும்போது, அதன் நற்பலன் அரசு நிர்வாகத்தில் உறுதியாக உணரப்படும்.
அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்.