கலைத் திருவிழா நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அறிவுரை

1 0
Spread the love
Read Time:7 Minute, 45 Second

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கலைத்திருவிழா. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. 2023 ஜனவரி 12ஆம் தேதி இன்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

மாணவர்களுக்குப் பிடித்த கலையைக் கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டது.

முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம் வகுப்பு, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி அளவில் போட்டிகள் நடைபெற்றது.

மாநில அளவில் 27 முதல் 29-12-2022 வரை நடந்த போட்டிகளில்  6-8ஆம் வகுப்புக்கு மதுரையிலும் 9-10ஆம் வகுப்புக்கு கோவையிலும் 11-12ஆம் வகுப்புக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மற்றும் சென்னையிலும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.

இந்த மாணவர்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம். அவர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெரிய ஸ்டார் ஓட்டல்கள், உணவும் மிகவும் உயர்தரமானவை. வந்த செல்ல பேருந்து வசதியும் செய்யப்பட்டது. சென்னையில் நடந்த ஐந்து நாள் பயிற்சியின்போதும் மாணவர்களுக்கு உயர்தர உணவு வழங்கப்பட்டதோடு தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனவரி 8, 9, 10ஆம் தேதிகளில் வேப்பேரி உள்ள பள்ளியில் ஒத்திகை நடைபெற்றது. 11ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வர் முன்னால் நடக்கும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் ஒத்திகை நடைபெற்றது.

இந்தத் திருவிழாவின் நிறுவு விழா 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு செனை நேரு ஒள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நட்டு முதல்வர் முகஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதன்மைப்பெற்ற

மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி அவர்களுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த கலைத்திருவிழாவில் 13,210 பள்ளிகளில் இருந்து 28,52,993 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நவம்பர் மாதம் தொடங்கிய கலைத் திருவிழாவில் 206 வகையான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநில அளவில் பங்கெற்ற மாணவ, மாணவிகள் 17,038 பேர் கலந்துகொண்டனர். 1,759 மாணவர்கள் பரிசு பெற்றனர்.

12-1-2023 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கு காலையிலிருந்தே காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மாலை 5 மணிக்கு முதல் அரங்குக்குள் வந்தார். வரிசையின் நின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி கைகுலுக்கினார். முதல்வர் மேடைக்கு முன் வந்ததும் மாணவர்களின்  ஹோ… என்கிற உற்சாகக் குரல் அரங்கை அதிரச் செய்தன. நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் பரிசுகளை வழங்கிபேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ பாடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி, கற்பித்தல் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்தி வருகிறது. நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் நெஞ்சில் விதைப்பதை நான் பாராட்டுகிறேன். பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள்.

ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் – வெற்றி பெற்றோம் – பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

கலைத்திருவிழாவில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டத்திற்கான முதலிடம் கோவை மாவட்டத்திற்கும் இரண்டாம் இடம் சேலம் மாவட்டத்திற்கும் மூன்றாம் இடம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. விழாவில் அதிக மாணவர்களைப் பங்கு பெற வைத்த வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன், உதயநிதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்., பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சென்னை பெருநகர மேயர் பிரியர் மற்றும் பல எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!