
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் காரணமாக இலங்கை மக்கள், நாட்டில் வாழமுடியாத நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாகப் பலர் வெளிநாடுகளை நோக்கிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது.
கடந்த வாரம் கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை மீட்டனர்.

இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து சென்ற ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கைக்கு நாங்கள் செல்லமாட்டோம். இந்த வியட்நாம் முகாமிலேயே தங்கிக்கொள்கிறோம் என்று இலங்கை அகதிகள் கூறிவருகின்றனர்.

இவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்?
இலங்கையில் மக்கள் வாழமுடியாத நிலையில் வேறு நாடுகளுக்குச் செல்ல லாம் என்று இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள சில ஏஜென்ட்கள் இவர்களிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சிறய கப்பல்களில் கனடா, ஆஸ்திரேலியா பிலிபைஸ் போன்ற நாடுகளுக்கு அகதிகளாய் போய் பிழைத்துக்கொள்ளலாம் என்று தூண்டப்படுகிறார்கள். அதற்கு ஒருவருக்கு 10 லிருந்து 20 லட்சம் வரைக்கும் வசூலிக்கிறார்கள். அதற்கு ஆபராக 6 பேரை அறிமுகப்படுத்தினால் ஒருவருக்கு இலவசம் என்று அறிவிப்பு வைக்கிறார்கள். இதை நம்பி சிலர் ஒருவருக்கொருவர் சொல்லி சிறிய படகில் சட்டவிரோதமாகப் போய் பிழைத்துக்கொள்ளலாம் என்று துணிந்துவிடுகிறார்கள். இவர்களிடம் ஏஜென்ட்கள் முடிந்தவரைக்கும் முதலிலேயே முழு தொகையையும் பிடிங்கிவிடுவார்கள். இல்லை என்றால் பாதிதூரம் வரைக்கும் அழைத்துச்சென்று மொத்தத் தொகையையும் பிடுங்கிக்கொண்டு அவர்களே இலங்கை அரசுக்கு தெரிவித்து விடுவார்கள். இப்படி நாடு கடந்து அழைத்துச் செல்லும் அபாயப் பயணத்தில் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். ஏதோ ஒரு சில கப்பல்கள் நாடுகளை அடையலாம். அதை வைத்துக்கொண்டு மற்றவர்களும் சட்டவிரோதமாகத் தப்பிக்க முயல்கிறார்கள். இப்படி இந்த ஏஜென்ட்கள் 10 ஆண்டுகளாக ஏமாற்றிவருவதாக இலங்கை அகதி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் பிரச்சினை என்றால் ஆளுங்கட்சியைக் குறைகூறிவரும் தமிழக ஈழ ஆதரவு வேடக் கட்சிகள் 303 இலங்கைத் தமிழர் பரிதவிக்கவிட்டதைக் கண்டும் காணாமல் இருப்பது எதனால்? இங்கு தி.மு.க.விற்கு எதிராகத் தமிழக அரசியல் பேசி கம்பு சுத்தும் பல புலம்பெயர் ஈழ தமிழர் கூட்டம் 3 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்து தற்போது வியட்நாம் அகதி முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்கள் பற்றி வாயே திறக்கவில்லை இவர்களுக்குச் சொந்த மக்கள் மீதான அக்கறை இவ்வளவுதானா?