ஒரு குழந்தைநல சிறப்பு மருத்துவரின் மனக் குமுறல்

1 0
Spread the love
Read Time:5 Minute, 4 Second

வணக்கம் நண்பர்களே..

இந்தப் பதிவு எனக்கு நடந்த அனுபவத்திலிருந்து நான் பார்த்த சில விடயங்களை உங்களுடன் பகிரவே.

இந்த ஜனவரியோடு நான் அரசு மருத்துவராகி 7 ஆண்டுகள் ஆகின..

இந்த ஏழு ஆண்டுகளும் ஒரு குழந்தை நல சிறப்பு மருத்துவராக பணியில் உள்ளேன்.. இந்த ஏழு ஆண்டுகளில் நானும் எங்கள் சக மருத்துவர்களும் சேர்ந்து கணக்கில் அடங்கா நோயுற்ற குழந்தைகளை நோயிலிருந்து விடுபட செய்து இருக்கிறோம். பல எண்ணற்ற பிறந்த சிசு முதல் பெரிய குழந்தைகள் வரை உயிர் நீடிக்க செய்து இருக்கிறோம். உங்களின் குரல் கேட்கிறது “அதான் அதற்கு சம்பளம் வாங்குகிர்களே” என்று..

ஆம், பணியில் சேர்ந்து 7 வருடம் கழிந்தும் இன்று பிடித்தம் போக ரூ.75000 வாங்கிக்கொண்டுதான் இதை செய்கிறேன்.. 24 மணி நேரம் Duty செய்தால் அதற்கான 24 hours duty allowance படியாக சொற்ப ரூ.300 பெற்று தான் இந்த வேலையை செய்கிறேன்.  

கண் விழித்து நாள் முழுவதும் பணி செய்து அந்த சொற்ப பணம் ரூ.300 மகிழ்வுடன் வாங்கிச் செல்கிறேன்.. காரணம் பணத்திற்காக வேலை என்றால் இந்த அரசு பணியில் நான் இருக்க வேண்டும் என்று தேவையே இல்லை..

காலை முதல் இரவு வரை வெளியில் நான் கிளினிக் பார்த்தால் இந்த சம்பளத்தை விட 3 மடங்கு அதிகம் என்னால் ஈட்டிட முடியும்.. இல்லை வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்தால் இதை விட 6 மடங்கு அதிகம். stressயே இல்லாமல் ஈட்டிட முடியம்.. முடியாமல் இல்லை.

சரி, நான் இவற்றை எல்லாம் ஏன் சொல்கிறேன்? இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.. விதிகளுக்கு உட்பட்டு என் சொந்த இடத்தில் நான் ஒரு கட்டடம் கட்டுகிறேன்.. ஒவ்வொரு அலுவலகத்திலும் அனுமதி முதல் சாக்கடை connection வரை நானே செல்வேன்.. அங்கே கையூட்டு சாதாரணமாக கேட்கப்படுகிறது.. அப்போது நான் ஒரு அரசு மருத்துவர் என்று சொல்லுவேன்.. நீங்க Doctor அப்போ இன்னும் கொஞ்சம் அதிகம் தரலாமே என்று தான் அவர்கள் மனதில் வரும் போல.

கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை.. என் மனதில் அப்போது ஒரு கேள்வி எழும் நான் ஒரு அரசு மருத்துவன். மக்கள் பணி செய்பவன். என்னை ஏன் இவர்கள் மதிப்பது இல்லை.. பணத்தை மட்டும் மதிக்கிறார்கள்.. இதற்கு எதற்கு நாம் மட்டும் நாயாய் உழைத்து இந்த சொற்ப பணத்திற்கு உழைக்க வேண்டும் என்று..

ஒரு MLA விடம் இல்லை. ஒரு ward கவுன்சிலர் இடம் இவர்கள் கையூட்டு கேட்டிட முடியுமா? கேட்கத்தான் செய்வார்களா? அவர்களைவிட நாம் தாழ்ந்தவர்களா என்று.

ஒரு ஊசி போடறேன் காசு கொடு.. ஆபரேஷன் செய்றேன் காசு கொடு. உன் உயிரை காபந்து செஞ்சிட்டேன். காசு கொடு.. 100 case பாத்துட்டேன் காசு கொடுன்னு ஒரு அரசு மருத்துவன் கேட்க ஆரம்பித்தால்? முடியுமா உங்களால்..?

எனது ஊதியத்திற்கு மேலாக ஒவ்வொரு மருத்துவனும் மற்ற அலுவலர்கள் மாதிரி கேட்க ஆரம்பித்தால்? ஆனால் நடக்காது.. எங்களது வேலை பணியில் அதற்கு சூழ்நிலையும் இல்லை.. கொரோனாவோடு ரிஸ்க் எடுத்து உங்களை காப்பாற்றியிருக்கேன். கவனிச்சிட்டு போங்கனு ஏதாவது ஒரு குரல் அரசு மருத்துவமனையில் ஒலித்து இருக்கிறதா?

மருத்துவர்களின் மதிப்பு தெரியாத நாடு நம் நாடு என்று வெட்கி ஒரு அரசு மருத்துவனாக நானே சொல்கிறேன். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் சொந்தங்களைக் கேட்டுப் பாருங்கள்.. ஒரு மருத்துவரைச் சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று.. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று.. நான் அத்துணை பெரிய இடம் கேட்கவில்லை.. எங்களை மதியுங்கள் போதும்.

Dr.G.அரவிந்தன் முகநூல் பக்கத்திலிருந்து

Happy
Happy
67 %
Sad
Sad
33 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!