நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தாலும் அவர்களது இரண்டு மகன்களும் பெற்றோருடன் சேர்ந்தே பயணிக்கிறார்கள். சமீபத்தில் தனுஷ் தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்குச் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் படிக்கும் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் இரு மகன்களுடன் (லங்கா, யாத்ரா) சேர்ந்து விழாவை ரசித்திருக்கிறார்கள்.
அப்போது அங்கே ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. லிங்காவை பள்ளி நிர்வாகம் விளையாட்டுக் குழுவின் கேப்டனாக அறிவித்தது. இதனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். அருகில் பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ்.