செல் வழி பணப்பரிவர்த்தனைக்கு பணம் வசூலிக்கிறார்களா?

1 0
Spread the love
Read Time:3 Minute, 45 Second

PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY என பேபே என்று எல்லா கடைகளிலும், உணவகங்களிலும், பெட்டிக் கடைகளிலும், அடுமனைகளிலும் ஏன் தள்ளுவண்டி, மிதிவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் ஸ்கேன் அட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாமும் நம் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துத் தள்ளுவது போல ஸ்கேன் செய்து எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறோம். கையில் பணம் இருந்தால் கூட அலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டுதான் பொருட்கள் வாங்குகிறோம்.

மேலும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும், நம் தொழிலுக்கும் என அவசரத்திற்குப் பணப்பரிமாற்றமும் செய்து கொள்கிறோம். ஏனென்றால் நாம் டிஜிட்டல் இந்தியாவில்  வாழப் பழகிவிட்டோம். மேலும் இது ஒரு பெருமைக்குரிய செயலாகவும் தற்சமயம் மாறியிருக்கிறது. எப்படி பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகளில் நடந்து பொருள் வாங்குவது fashion ஆகிப் போனதோ அது போல இதுவும் இன்றைய தேதியில் ஒரு கெளரவமாகிவிட்டது. 

இதற்கு நானும் அடிமையாகி எல்லாவற்றுக்கும் அலைபேசியைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்குவது என இயல்பாகவே அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இப்படி pay pay என எல்லா பே யையும் பயன்படுத்திய எனக்கு என் வங்கி (KVB) இன்று பெப்பே காட்டியது. என் கணக்கில் இருந்து  ரூ.976.80‌ பிடித்தம் செய்திருந்தார்கள்.

எதற்காக இந்தப் பிடித்தம் என கேட்டதற்கு “நீங்கள் gpay போன்றவைகளை அதிக அளவில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆறு மாத காலத்திற்கு 90 முறையே பயன்படுத்த வேண்டும். ( இது வங்கிகள் வாரியாக மாறுபடும்) அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 2 + வரி பிடிக்கப்படும்” என பதில் கிடைத்தது. எந்தவிதமான அறிவிப்புமின்றி, தகவலுமின்றி இந்த உருவல் நடந்திருக்கிறது. கேட்டால் இதை நீங்கள்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். 

ஒருபுறம் இதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லி நம்மை பழக்கப்படுத்தி விட்டு மறுபுறம் நம் சட்டைப்பையில் இருந்து நமக்குத் தெரியாமலேயே நம் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் டிஜிட்டல் இந்தியா போலும். 

இதைப் பற்றித் தெரிந்தவர்கள் செய்தியாகவும், என்னைப் போல தெரியாதவர்கள் இருந்தால் இதை ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவாகவும் எடுத்துக்கொண்டு பார்த்துப் பயன்படுத்தும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

ஒரு பாதிக்கப்பட்ட இந்திய குடிமகன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!