உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் செழிப்பும் (International Anti-Corruption Day)

1 0
Spread the love
Read Time:23 Minute, 7 Second

உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. 

முதலில் ஊழல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா?

ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ‘ஊழல் புலனாய்வுக் குறியீடு’ என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை எந்தெந்த நாடுகளில் எவ்வளவு ஊழல் நடந்து வருகிறது, ஊழலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் உலகில் எந்த நாடும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணவில்லை என்பதே கசப்பான உண்மை.

உலகளாவிய நோயாக இருந்து வரும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு: ஊழலை வேண்டாம் என்று சொல்லுங்கள்’ (Your right, your role: Say no to corruption) என்பதாகும்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒவ்வொரு தனிநபருக்கும் பங்கு உண்டு என்பதை இந்த தீம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மனுநீதிச் சோழன் காலத்தில் நீதிக்காகத் தன் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றர். அப்போது அந்த நாட்டில் நீதி இருந்தது. யூதாஸ் சில வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். அந்த நாட்டில் ஊழல் புரையோடி இருந்திருக்கும்.

கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் மற்றும் முக்கிய படியை எடுத்து வைத்தது. ஐக்கிய நாடுகளின் பொது சபை (UNGA) 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஏற்று கொண்டது. இந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஊழல் எது தெரியுமா? ஜீப் ஊழல்தான். கிருஷ்ண மேனன் 200 ஜீப்களை ராணுவத்திற்காக பிரிட்டிஷிடம் வாங்க ஒப்பந்தம் செய்தார். வந்தது என்னவோ 155 ஜீப்கள்தான். இதற்கு பிரிட்டிஷ் அரசும் உடந்தை. இந்தியாவை ஊழலில் தள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் முடிவு செய்திருந்தது. இந்த கிருஷ்ண மேனனால்தான் சீனப் போரில் இந்தியா படுதோல்வி அடைந்து பெரிய நிலப்பரப்பை இழந்தது. இவர் செய்த ஊழல்களினால் ராணுவத்திற்குப் போதுமான ஆயுதங்களோ, வாகனங்களோ, வசதிகளோ செய்து தரப்படவில்லை. சீனர்களைக் கட்டையால் அடித்துக் கொன்று அவர்களின் துப்பாக்கியைப் பிடுங்கித்தான் இந்திய ராணுவம் போரே செய்தது என்றால் ஊழலின் நிலைமையை யோசித்து பாருங்கள்?

இதை அனைத்தையும் நேரு கண்டு கொள்ளாமல் இருந்தார். மேனனுக்கு கொடூர தண்டனை கிடைத்திருந்தால் நாட்டில் ஊழல் இருக்காது.

இன்னொரு ஊழல்

எழுபதுகளின் ஆரம்பத்தில் திருச்சி BHEL நிறுவன கணக்குகளில் ஒரு பெரிய தொகை tally ஆகவில்லை என்று CAG அலுவலகத்தில் இருந்து தணிக்கை செய்ய ஒரு அதிகாரி போனாராம். பல நாட்கள் தணிக்கை செய்தும் கண்டுபிடிக்க முடியாததனால், கணக்கில் வராத தொகையை write-off பண்ண பரிந்துரைத்துவிட்டு திரும்பினாராம்.

Tally ஆகாத தொகை: பதினேழு ரூபாய் ஐம்பது காசுகள்.

தணிக்கை அதிகாரி கோரிய பயணப்படி: இருநூற்று தொண்ணூறு ரூபாய்!

இந்த விஷயம் இட்டுக்கட்டிய கதையாகக் கூட இருக்கலாம்.

இன்னொரு ஊழல்

இந்தியாவில், ஊழல்களின் தாய் என்றறியப்படுவது போபோர்ஸ் பீரங்கி ஊழல். ஊழல்/லஞ்ச மதிப்பைவிட அதிகப் பணத்தைப் புலனாய்விற்குச் செலவிட்டுள்ளோம்! இவ்விஷயம் பொய்யில்லை!

ஊடகங்களில் உள்ள பட்டியலைவிட நாம் ஒன்றும் அதிகமாக அறிந்து வைத்திருக்கப் போவதில்லை. ஊடகங்களில் இல்லாத ஊழல்கள் பற்றி நாம் அறிந்திருப்பின், நாம் உயிரோடிருக்க சாத்தியமில்லை. யாரும் கண்டுகொள்ளாத ஒரு விஷயம் மட்டும் இங்கே:

ஒரு ஊழலை/செயல்பாட்டினைப் பெரிதுபடுத்திப் படம் போட்டுக் காண்பித்துவிட்டு அதைவிட பெரிய விஷயங்களை லீகலாக நடத்திக் கொள்கின்றனர்.

இன்னொரு ஊழல்

வீரப்பனைத் தேடிய அதிரடிப்படை மலைவாழ் மக்களைத் துன்புறுத்தியது/கற்பழித்தது; அப்போல்லோ ஆஸ்பத்திரியில் இட்லி விலை என்ன என்றெல்லாம் கேட்டு உணர்ச்சிவசப்படுவோர் நாம். நம் வாய்க்கு அவல் தந்து விட்டு உரல் அளவு விஷயங்கள் பின்னணியில் நடத்திக்கொண்டு போய்க்கொண்டே இருப்பர். ஊழல் செய்த பணத்தில் ஸ்விஸ் செல்பவர் ஒருவர். அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று ஒரு டஜன் பேர்கள் அதிகாரபூர்வமாக சென்று வருவர்!

ஒரு நாட்டில் அரசு நேர்மையாக இருந்தால் அங்கு நிச்சயம் ஊழல் இருக்காது. அரசு ஊழல்வாதியாக இருந்தால் அடித்தட்டு மக்கள் வரை ஊழல்வாதியாக இருப்பார்கள்.

இன்னொரு ஊழல் போபர்ஸ் பீரங்கி  ஊழல்

இந்த ஊழலை மறைக்க, மறக்க, இலங்கையில் அப்பாவிகளைக் கொன்று குவிக்க ராணுவம் அனுப்பப்பட்டது. இம்முறையும் தேசிய அவமானம். நாட்டை காக்கும் ராணுவத்தை அண்டை நாட்டில் கூலிப்படைகளாய் செயல்பட வைத்தது. முடிவில் ராஜீவும் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் ஊழல் செய்யாத அரசுத் துறை தெரியுமா? அப்படி ஒன்று இல்லை. 

இன்னொரு ஊழல்

‘2ஜி அலைக்கற்றை’ என்பது ஊழல்தான்! அதில் அரசுக்கு மட்டுமே இழப்பு. தனிநபர் ஊழல் என்பதே இல்லை என்ற வாதமும் ஏற்கக்கூடியதே! ஆனால் அது அரசியல் தலையீட்டால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது வேறுவிதம்!

‘ரஃபேல்’ ஒரு உலகமே வியக்கப்போகும் ஊழல்! நிச்சயம் ஒரு நாள் அதன் உண்மைத்தன்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர ஊழல், ஒரு ‘பிரபஞ்ச ஊழல்’ என்பதை மறந்துவிடக் கூடாது.

காங்கிரசின் ‘காமன்வெல்த்’ ஊழலையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் நடைபெறும் எரிபொருள் விநியோக ஊழல் – இரண்டு கட்சியின் ஆட்சியிலும் நடந்தது.

அரசு இயந்திரங்களைத் தனியார் மயமாக்கும் ஊழல், இப்போதைய பா.ஜ.க.வால் செய்யப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளுக்குத் தலையணை மற்றும் படுக்கைகள் வாங்கியதில் ஊழல்.

தமிழகத்தில் நோக்கியா நிறுவன ஆலைகளுக்கு நிலமளித்த விவகாரத்தில் தி.மு.க.வின் ஊழல்.

நாளும் நடைபெற்ற அ.தி.மு.க.வின் ஊழல்கள். கொரோனா கால மருத்துவப் படுக்கைகள் வாங்கிய ஊழல். சிறந்த உதாரணம் – வைகை அணையை தர்மாகோல்களைக் கொண்டு மூடியதற்குச் செலவிடப்பட்ட 10 லட்சங்கள்.

இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளுக்கான வரி ஏய்ப்பு ஊழல்.

இறுதியாக 2016-ல் நடைபெற்ற, இந்த அண்டத்திலேயே நடைபெறாத அளவிற்கு மிகப் பெரும் ஊழலான, ‘பணமதிப்பிழப்பு’.

இப்படி பல்லாயிரக்கணக்கான ஊழல்கள் இன்றைய மற்றும் முந்திய அரசுகளால் நடத்தப்பட்டுள்ளது.

இன்னொரு ஊழல்

ஒரு சான்றிதழ் வாங்க முதலில்  தலையாரிக்கு  லஞ்சம், அடுத்து VAO, அடுத்து RI , அடுத்து தாசில்தார், மீண்டும் VAOவிடம் லஞ்சம் கொடுத்து அந்தச் சான்றிதழை வாங்க வேண்டும். ஒரு சாதாரண சர்டிபிகேட்டுக்கு எத்தனை பேருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்குனு பாருங்க. அப்போ பெரிய வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் இருக்கும்னு யோசிச்சு பாருங்க? காவல்துறை பற்றி சொல்லத் தேவையில்லை. ஒரு மொபைல் இலவசமாகக் கொடுக்கப்படாததால் ஜெயராஜ், பென்னி தந்தை மகன் இருவரையும் சித்திரவதை செய்து கொன்றனர். ஒரு போன் லஞ்சமாக கொடுத்திருந்தால் இரு உயிர்கள் இன்று இருக்கும். 

மீதியுள்ள 100 லாக்அப் மரணங்களிலும் இறந்தவர்கள் மீது அதற்கு முன் எந்தக் குற்றசாட்டும் இல்லை. மற்ற அனைத்து லாக்அப் மரணங்களுமே ஊற்றி மூடப்பட்டதுதான்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. எம்.எல்.ஏ. சீட் வாங்க கட்சித் தலைமைக்கு 10 கோடி வரை தர வேண்டும். சீட் வாங்கிக் தரும் தரகருக்கு 2–3 கோடி தர வேண்டும். எம்.பி. சீட்டிற்கு ஐந்து கோடி தர வேண்டும். கவுன்சிலர், பிரசிடென்ச் சீட் ஐந்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும். இதெல்லாம் கட்சித் தலைமைகளுக்குத் தேர்தல் செலவுகள் தனி. ஜெயித்த பின் அவர்கள் செய்யும் ஊழல்கள் வேற லெவல். எம்.எல்.ஏ.க்கள் ஆயிரம் கோடி வரை ஊழல் செய்து விடுகின்றனர்.

இன்னொரு ஊழல்

மணல் குவாரி, சாலை போடுதல், அரசு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றிற்கும் கோடிக்கணக்கில் கமிஷன். சில அரசு நிறுவனங்கள் செயல்படாமல் இருக்க கோடிக்கணக்கில் கமிஷன் தரும் தனியார் நிறுவனங்கள்.

வேறென்ன தட்டிக் கேட்க வேண்டிய மீடியாக்கள். ஒரு செய்தி வெளியிட சம்பந்தப்பட்டவரிடம் ரூ. 2000 லிருந்து 5000 வரை வாங்கிகொண்டுதான் ஸ்டோரி போடுவார்கள். எல்லாம் பெய்டு நியூஸ். அதுவும் அரசியல் கட்சி மீட்டிங் என்றால் கட்டாயம் கவர் கேட்பார்கள். கவரையும் வாங்கிக்கொண்டு அந்த அரசியல்வாதியையும் கிண்டலடித்தே செய்தி வெளியிடுவார்கள். சினிமா பிரஸ்மீட்னா கண்டிப்பா பெரிய தொகை கிடைக்கும். இவ்வளவு தான் இந்தியாவின் 4வது தூணின் லட்சணம். இந்த மீடியாக்களின் முதலாளிகள் யார்? மணல் திருடன், ரிட்டையர்ட் ரவுடி, கல்வி தாதாக்கள், ஊழல் செய்த அரசியல்வாதிகள்.

பிரிட்டிஷ் காலத்தில் ஊழல் என்ற வார்த்தையைக் கேள்வி பட்டதுண்டா? மொகல் காலத்தில் கேள்விப்பட்டதுண்டா? கொடுங்கோலர்களின் ஆட்சியில் கூட ஊழல் இல்லை. பிரிட்டிஷ் காலம் வரை இல்லாத ஊழல் விடுதலை கொடுத்த சில மாதங்களிலே வந்து விட்டது. நேருவின் காலத்திலிருந்து இந்தியாவில் ஊழல் புரையோடத் தொடங்கியது. மந்திரிகளைப் பார்த்து அரசு அதிகாரிகள் ஊழல் செய்யத் தொடங்கினர். அதிகாரிகளைப் பார்த்து ஊழியர்கள் ஊழல் செய்யத் தொடங்கினர்.

இந்திரா காந்தி காலத்திலேயே ராக்கெட் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.

ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இருந்து ஊழல் செய்வது அரசியலில் சாதரண விஷயமாக்கப்பட்டது. அது இன்று வரையிலும் தொடர்கிறது. மோடி காலத்திலும் நின்ற பாடில்லை. அவர்களும் ஊழலை ஒழிக்க விரும்பவில்லை. ஊழலை ஒழிப்பவர்கள் எவ்விதம் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பார்கள்?

முதலில் ஊழல் செய்த மந்திரிகளைச் சிறையிலடைத்தால் ஐ.ஏ.எஸ்.கள் பயந்து ஊழல் செய்ய மாட்டார்கள். எம்.பி. எம்.எல்.ஏ.க்களைச் சிறையிலடைத்தால் கலெக்டர்களும், தாசில்தார்களும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். தாசில்தார்களைத் தண்டித்தால் வி.ஏ.ஓ.க்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். இதுதான் நடைமுறையில் இருக்க வேண்டிய விஷயம். ஆனால் அவ்விதம் இருப்பதே இல்லை.

ஒரு சாதாரண மனிதன் லஞ்சம் தராமல் அவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒரு சான்றிதழும் கிடைக்காது. இந்தியாவின் நிர்வாக அமைப்பே ஒவ்வொரு மட்டத்திலும் லஞ்சம் வாங்கும் வகையிலே பலமாக அமைக்கப்பட்டுள்ளது .

ஊழல் செய்வதும், லஞ்சம் வாங்குவதும் அதனால் சிறை செல்வதும் சாதாரணமான விஷயமாக மக்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் வரை இருந்த ஊழல் இப்போது பொது மக்களிடம் வந்து விட்டது. பணம் கொடுத்தால்தான் ஓட்டே போடுகிறார்கள் இப்போதெல்லாம். பணம் தராவிட்டால் புறக்கணிக்கிறார்கள். அதுவும் இரண்டு மூன்று கட்சிகளிடம் பணம் வாங்கி அதில் அதிகப் பணம் தந்தவருக்கே ஓட்டு. அல்லது பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார்கள். இந்த அளவிற்கு ஊழல் அனைத்து பக்கமும் வந்துவிட்டது.

அவர்களை அவமானப்படுத்த வேண்டும், அவர் குடும்பத்தினரை ஒதுக்க வேண்டும், சமூகத்தில் அவர்கள் நடமாட வெட்கப்பட வேண்டும். அந்தளவில் மக்கள் ஒதுக்கினால் லஞ்சம் வாங்குவது குறையும்.

இந்தியாவில் ஒரு பியூன் வேலையைவிட மாட்டான். ஒரு கவுன்சிலர் பதவி விலக மாட்டார். ஆனால், பிரிட்டனில் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார். பல நாடுகளில் சிறிய குடைச்சலுக்கே பதவியைத் தூக்கி எறிகின்றனர். காரணம் அங்கு ஊழல் மூலம் சம்பாதிக்க முடியாது. பிரதமர் பதவியைவிட டென்சன் அற்ற வேறு வேலையைப் பார்க்கலாம் என்று நினைக்கின்றனர். இந்தியாவில் பணம் கண்ணை மறைக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, அரபு நாடுகளில் பெரும்பாலும் ஊழல்கள் மிக அரிது. லஞ்சம் என்பதே கிடையாது. அதற்குக் காரணம் மக்களல்ல, அரசாங்கம். அரசாங்கம் நினைத்தால் ஒரு மாதத்தில் ஊழல்வாதிகளை ஒழிக்க முடியும்.

பெகாசஸ் ஊழல், பி.எம். கேர்ஸ் ஊழல், உலகின் மிகப்பெரிய ஊழலான ரஃபேல் ஊழல் என்று வரிசை கட்டி நிற்கிறது பா.ஜ.க. ஊழல்கள்?

பெகாசஸ் ஊழல் – முதலில் இந்தியா Pegasus சாப்ட்வேரை வாங்கவே இல்லை. இதில் ஊழல் எங்கிருந்து வந்தது? இந்த பஞ்சாயத்தை கிளப்பிய Amnesty International இப்போது வரை வாயைத் திறக்கவில்லை. அது எப்படி பார்லிமென்ட் கூட்டம் நடைபெறுவதற்குச் சரியாக இரண்டு நாட்கள் முன்னாடி நியூயார்க் டைம்ஸ் ஒரு ஆதாரம் கூட இல்லாமல் இந்த நாட்டு பிரதமர் அங்கே போனார், அந்த நாட்டு பிரதமர் இங்கே வந்தார்? உடனே Pegasus சம்பந்தமாகத்தான் பேசினார்கள் என்று கதை விடுகிறார்கள்?

இந்தியாவில் CAG என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அனைத்து விதமான அரசாங்க பணப்பரிவர்த்தனைகளுக்கும் அங்கே தணிக்கை உண்டு.

கோர்ட் தான் ஓபன் challenge கொடுத்திருக்கிறார்களே ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் போன்றோர் ஏன் இன்னும் Pegasus உள்ள போனை சமர்ப்பிக்கவில்லை?

P.M. கேர்ஸ் ஊழல் – ஊழல் எங்கிருந்து வந்தது? கடந்த ஓரிரு வருடத்தில் தொடங்கப்பட்ட இந்த டிரஸ்ட் ஆரம்பித்த ஐந்து நாட்களில் 3100 கோடி வசூலித்தது? இதில் 50,000 வெண்டிலேட்டர்கள் 2000 கோடிக்கு வாங்கப்பட்டது, 1000 கோடி ரூபாய் migrant workers நலத்திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது (இந்தப் பணம் கலெக்டர்கள் வாயிலாக உணவு, தங்குமிடம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றுக்காகச் செலவிடப்பட்டது). ரூ.100 கோடி மருந்து தயாரிப்புக்காகச் செலவிடப்பட்டது.

இந்த வருடம் auditing இனிமேல் தான் நடக்கும்.

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு உள்ளது.

உங்களுக்கு தெரியுமா PM NDRF CAG கீழ் வராது. ஆனால் அதில் காங்கிரஸ் தலைவர் டிரஸ்ட் குழுவில் ஒரு மெம்பர். இப்போதெல்லாம் அரசாங்கப் பணத்தை நினைத்த நேரத்தில் ராஜீவ் காந்தி மெமோரியல் டிரஸ்டுக்கு கொடுக்க முடியாது என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

உலகின் மிகப்பெரிய ஊழலான ரஃபேல் ஊழல்

கேக்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுமாம். CAGயே சொல்லிவிட்டது பா.ஜ.க. காங்கிரஸ் ஆட்சியைவிட 2.86% குறைந்த விலையில் ரஃபேல் போர் விமானத்தை வாங்கி உள்ளது என்று.

Supreme court போயும் ஒரு பருப்பும் வேகவில்லை. கடைசியில் ராகுல் காந்தி கூட மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்.

விலையை வெளியிடக் கூடாது என்று 2008இல் ஒப்பந்தம் போட்டுவிட்டு
2018இல் விலையை அரசு சொல்ல வேண்டும் என்று கேட்க காங்கிரஸை தவிர வேறு யாரால் முடியும்?

இதே காங்கிரஸ் தனது பத்தாண்டு ஆட்சியில் ஒரு புதிய போர் விமானம் கூட வாங்கவில்லை. 2012இல் இராணுவ அமைச்சராக இருந்த ஆண்டனி போர் விமானங்கள் வாங்கப் பணம் இல்லை என்றது உங்களுக்கு மறந்திருக்காது.

இந்தியாவின் சொந்த தயாரிப்பு தேஜாஸ் போர் விமானத் தயாரிப்பு கிடப்பில் போடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி கொடுத்தார்கள் என்றெல்லாம் பொய் புளுகினார்கள். ரிலையன்ஸ் பெற்ற ஆப்செட் காண்ட்ராக்ட்டின் மதிப்பு வெறும் 900 கோடி. மொத்த ஆப்செட் value வில் வெறும் 3%.

பா.ஜ.க. செய்யும் பெரும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இல்லாத ஊழலை உருவாக்க முயல்பவர்கள், இது 2022 என்பதை உணருங்கள். 2004 போன்று போலி சவப்பெட்டி ஊழல் பருப்புகள் சோஷியல் மீடியா காலத்தில் வேகாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!