அக்டோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது அன்றைய இரவு செய்தியில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இல்லை என்று அறிவிப்பதற்கு வருந்துகிறோம் என ஸ்கிரிப்டில் இருந்ததை அன்னை இந்திரா காந்தி என அவர் சேர்த்து படித்தது பலரின் பாராட்டை பெற்றது.
அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ், ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார்.
புதுதில்லியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒளிபரப்புத் துறைக்கு பங்களித்து வந்தார்.
தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள் மற்றும் செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுப்பதைத் தவிர, தமிழ்த் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் மற்றும் ஸ்பாட்டிங் (ஆங்கிலத்தில்) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு இருந்தது.
அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆகஸ்ட் 14 ம் நாள் மும்பையில் காலமானார்.