அமெரிக்காவில் மென்பொருள் தொழில்முனைவராக இருக்கும் அரசு லட்சுமணன் (லேனாதமிழ்வாணன் அவர்களின் மூத்த புதல்வன்)
“ஆன்மீகம் என்பதற்குமப்பால் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் அமெரிக்காவிலும் பல ஆயிரம் பேர்களுடன் தைப்பூசப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. வந்து பாருங்க!” என்று அழைத்தார்.
2011 ல் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் சோலை அழகப்பன் (Oracle Software Developmentல் வைஸ் பிரசிடென்ட்!) தன் இணைவி சிவகாமியுடன் சேர்ந்து உறவு நட்புக்களை இணைத்து–
“ஊரைவிட்டு வந்ததால் பலதையும் இழக்க வேண்டியுள்ளது. சிறுவயது முதலே கலந்துகொண்ட பாதயாத்திரை இங்கும் ஏன் கூடாது என்று”
வெறும் 1௦௦ பேர்களுடன் தொடங்கினார். சான் ரமோன் நகரிலிருந்து கான்கார்ட் சிவ முருகன் ஆலயம் வரை 19 மைல்கள்!.
கடந்த சில ஆண்டுகளாக இந்த யாத்திரை பல ஆயிரம் பேர்களுடன் சான் ரமோன் நகருக்குள்ளாகவே குன்றுகள் மேல் உருவாக்கப்பட்டுள்ள “வேல்மோன்ட்” முருகன் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சாதி-மத-இன வேறுபாடின்றி பெரியவர்கள், சிறுவர்கள் என மாரத்தான் ஓட்டம் போல வெள்ளையர்களும் கூட இதில் ஐக்கியமாவது விசேஷம்.
இதற்கு வடஅமெரிக்காவின் பல நகரங்களில் இருந்தும் மக்கள் முன்பதிவுடன் படையெடுப்பு!
அங்கு செல்வம் என்பவரின் ஆதரவில் காலை சிற்றுண்டி, மதியம் வாழை இலையில் கல்யாணச் சாப்பாடு, சுக்கு காபி-பானகம் என்று பாரம்பரிய முறையில் ஒரே அசத்தல்!
pathayathirai.org என்ற NGO வாயிலாக அமெரிக்க அரசின் ஆதரவுடன் –
குடும்பத்துடனும் குழுமத்துடனும் உழைக்கிற—சோலை, மெய்யப்பன், உலகப்பன், நல்லகுமார், அன்புராஜா, பாலு, இந்திரா ஜம்புலிங்கம், Al அழகு, பழனி தியாகராஜன், பிரபு வெங்கடேஷ், செல்வா, சூர்யா, ராஜ் நடராஜன் போன்றோருக்கு நமஸ்க்காரம்!
- என்.சி.மோகன்தாஸ்
பட மிக்ஸ்; ஹரிலக்ஷ்மன்
NcMohandoss Ncm முகநூல் பக்கத்திலிருந்து