இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அந்த நாட்டின் இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, ஒரு கோடியாக ஆனது. இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
அதாவது இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, ஒரு கோடியாக ஆனது. இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் இந்தியர்கள் அதிகரித்திருக்க, இந்திய மாப்பிள்ளை அதிபராக அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டவர் மீதான இனவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது கவலைக்குரிய செய்தியாகவே அறியப்படுகிறது.
மேலும், அங்குள்ள சமூகங்களுக்கு இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. இனவெறி சார்ந்த கருத்துகள் பூர்வகுடி மக்களிடம் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது என்று அந்நாட்டு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய ஆண்டில் 2011இல் இருந்ததை விட
2021இல் இடம்பெயர்வு குறைவாக இருந்ததையும் நாம் காணலாம். இது பெருமளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.