இன்று முதல் 16-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை திருச்சியில் புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது. திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழக அரசு, ரூ.17.50 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில், 150-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்களின் ஸ்டால்களை அமைக்விருக்கின்றன.
புத்தகக் கண்காட்சிக்கு ஆகும் செலவினங்களை சரிக்கட்ட பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், கல்வி நிறுவனங்கள், இன்ஜினீயரிங் நிறுவனங்களிடம் நன்கொடைகள் வசூலிக்கும்படி பல்வேறு துறை அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் கடந்த 30-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இது முற்றிலும் சட்டவிரோதமானது எனக்கூறி, இதுபோல தனியாரிடம் நன்கொடைகள் வசூலிக்க கலெக்டருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே புத்தகக் கண்காட்சிக்கு தனியாரிடம் நன்கொடை வசூலிக்க அனுமதித்து கலெக்டர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நன்கொடை வசூலிக்கும்படி மாவட்ட நிர்வாகம் வழங்கிய சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுபோல அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார்.