காரைக்குடி நண்பர்களே, சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். ஒரு மெக்கானிக் கடையின் மூலமாக எனது வாகனத்திற்கு பேட்டரி வாங்கினேன்.
பிற்காலத்தில் ஏதேனும் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டால் மாற்று பேட்டரி பொருத்தித் தருவது எனது பொறுப்பு என்று மெக்கானிக் கடைக்காரர் தெரிவித்திருந்தார். ஆனால் பேட்டரி செயல்படவில்லை என்று கூறியபோது நேரடியாக டிஸ்ட்ரிபியூட்டரைச் சென்று பாருங்கள் என்று அனுப்பிவிட்டார்.
டிஸ்டர்ப் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துவிட்டார். பிறகு இணையம் வழியாக சென்னையில் அவர்களது தலைமை அலுவலகத்தில் பேசி கோயமுத்தூரில் தொடர்புகொண்டு மதுரையில் அவர்களது அலுவலக அலுவலரிடம் பேசி மறுநாள் காலை பதினோரு மணிக்கெல்லாம் எனக்கு பேட்டரி மாற்றிக் கொடுத்தார்கள்.
ஆனால் மெக்கானிக் கடைக்காரரும், டிஸ்ட்ரிபியூட்டரும் பேட்டரி மாற்ற குறைந்தது 20 நாட்களாவது ஆகும் என்று தெரிவித்தார்கள். 20 நாட்களில் பேட்டரியை மாற்றித் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்ட பொழுது அவர்கள் அதற்கான பதில் கூறவில்லை.
நேர்மையான கடை உரிமையாளருக்கு வாழ்த்துகள்
ஆனால் காரைக்குடியில் தற்பொழுது எனக்கு ஒரு பேட்டரி கடையில் அறிமுகம் ஏற்பட்டது. எனது பேட்டரி மீண்டும் செயல்படாமல் போனபோது அந்தக் கடைக்காரரைத் தொடர்பு கொண்டேன்.
அவரோ என்னிடம் “நீங்கள் பேட்டரி வாங்கவில்லை என்றாலும் தாங்கள் பேட்டரியைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு மாற்று பேட்டரி போட்டு விடுகிறோம் என்று அன்பாகப் பேசி பேட்டரியில் உள்ள அனைத்து விவரங்களையும் என்னிடம் எடுத்துக் கூறி பேட்டரியை மாற்றிக் கொடுத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அவரே எனக்கு போன் செய்து, “சார் பேட்டரி நீர்த்து விட்டது. எனவே புது பேட்டரி போட்டுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறினார். நானும் எனது பேட்டரியை செக் செய்து, அது சரியில்லாமல் இருந்ததால் புது பேட்டரிக்குச் “சரி” என்று கூறிவிட்டேன்.
புது பேட்டரி வாங்கும்பொழுது, பழைய பேட்டரிக்கு வாரண்டி காலம் முடிந்தாலும், புரோ வாரன்டி பீரியட் இருப்பதாகக் கூறி அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை எனது புதிய பேட்டரியின் தொகையில் கழித்துக் கொண்டார்.
என்னால் அந்த நிகழ்வை மறக்கவே முடியாது. ஏனென்றால் பேட்டரி தொடர்பாக முன்பு எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி. பழைய மெக்கானிக்கும், டிஸ்ட்ரிபியூட்டரும் இருவரும் என்னைச் சுற்று சுற்று என்று சுற்றி விட்டார்கள். ஆனால் இந்த பேட்டரி கடைக்காரரோ என்னிடம் அன்பாகப் பேசியதுடன், அவரிடம் பேட்டரி வாங்கவில்லை என்றாலும், மாற்று பேட்டரி கொடுத்ததுடன், புதிய பேட்டரியும் குறைவான விலையில் கொடுத்துள்ளார்.
புதிதாக வாங்கிய பேட்டரியும் நன்றாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த பேட்டரி கடைக்காரர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி AVR பேட்டரி கடையின் உரிமையாளர் ராஜதீபன் ஆவார் .
எத்தனையோ பேர் ஏமாற்றுவதற்குப் பல்வேறு வகைகளில் முயற்சி எடுத்தாலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் AVR பேட்டரி ராஜதீபன் மிகவும் நல்ல முறையில் தன்மையாகப் பழகி வாடிக்கையாளருக்கு நண்பராக இருக்கிறார் என்று எண்ணும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவரை பாராட்ட தொடர்பு எண் : 8610927229.
எம்.எஸ்.லட்சுமணன், காரைக்குடி.