3 வருடங்களுக்குப் பிறகு உடலை அடக்கம் செய்யும் வினோதத் திருவிழா

whatsapp-thumb
4 0
Spread the love
Read Time:6 Minute, 30 Second

மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கள் முன்னோர்களின் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து மானேன் எனப்படும் வித்தியாசமான திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை சடலங் களைச் சுத்தம் செய்யும் விழா என்று அழைக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் 34 மாநிலங்கள் உள்ளன. சுமத்திரா தீவில் 10 மாநிலங் களும் ஜாவா தீவில் 6 மாநிலங்களும் போர்னியோ தீவில் 5 மாநிலங்கள், சுலாவெசி தீவில் 6 மாநிலங்கள், மலுக்கு தீவில் 2 மாநிலங்கள், மேற்கு நியு கினி தீவில் 2 மாநிலங்கள், சுந்தா தீவுகளில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாநிலங்கள் உள்ளன.

உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகில் மிக அதிகமான முஸ்லிம் மக்களைக்கொண்ட நாடு இது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தையும், அதிபரையும் கொண்ட ஒரு குடியரசு.

ஜகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன. இந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. ஜொகூர் சுல்தானகத்தில் பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இஸ்லாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனே சிய அரசியலமைப்பில் உள்ளது. அரசாங்கம் இஸ்லாம், பௌத்தம், இந்து, ரோமன் கத்தோலிகம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய ஆறு சமயங் களை மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது

சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளன.

சுலாவெசி என்பது இந்தோனேசியா தீவுகளில் ஒன்று. 2005ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி இந்தத் தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இறந்தவர்களின் உடல்களை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தோண்டி எடுத்து திருவிழா போல கொண்டாடு கின்றனர்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கள் முன்னோர்களின் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து மானேன் எனப்படும் வித்தியாசமான திருவிழா கொண்டாடப்படுகிறது.

புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து குளிப்பாட்டி புது துணிகளை போட்டு கொண்டாடுகின்றனர். இதை சடலங்களைச் சுத்தம் செய்யும் விழா என்றும் சொல்கின்றனர்.

இங்கு ஒரு மனிதன் இறந்துவிட்டால் உடனே ஈமச்சடங்குகளை செய்வ தில்லை. இறந்தவருக்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தகுந்த மரியாதையை அளித்து அனுப்புகின்றனர். இதற்காக இவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.

முதலில் இதன் தொடக்கமாக காளைகளையும் எருதுகளையும் பலியிடுகின் றனர். அதன் கொம்புகளைக் கொண்டு இறந்தவரின் வீடுகளை அலங்கரிக் கின்றனர். ஒருவரின் வீடு எந்த அளவுக்கு கொம்புகள் கொண்டு அலங்கரிக் கப்படுகின்றதோ அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை என நம்புகின்றனர்.

இந்தக் கிராமம் மலை மீது அமைந்திருப்பதால் சவப்பெட்டிகளை வைப்பதற் காகவே குகைகள் வெட்டப்படுகின்றன. மேலும் உடல்கள் சிதைவுறாமல் இருக்க பல துணிகளை வைத்து உடல் சுற்றப்படுகின்றது.

ஈமச்சடங்குகள் காலதாமதமாகச் செய்யப்படுவதற்கு மற்றுமோர் காரணம் இவர்களின் ஈமச்சடங்குகள் அதிக செலவில் செய்யப்படுவதால் பணம் சேரும் வரை உடலைப் பாதுகாத்து வைக்கின்றனர். இறந்தவரின் உடல்களை குளிப் பாட்ட, அலங்கரிக்க இவர்கள் ஒருபோதும் முகம் சுளிப்பதில்லை.

அந்த உடல்கள் அடக்கம் செய்யும் வரை அந்த நபர் இறந்துவிட்டதாக ஊர்வாசிகள் நம்பாததால் அந்த உடலை நோய்வாய்ப்பட்டிருப்பவர் அல்லது தூங்கிக்கொண்டிருப்பவர் என்று நம்புகின்றனர்.

அடக்கம் செய்யப்பட்டவர்களை ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒரு முறை ஆகஸ்ட் மாத இறுதியில் வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்து குளிப்பாட்டி புத்தாடை உடுத்தி அலங்கரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு திருவிழா போல கொண்டாடுகின்றனர். இந்த வினோதத் திருவிழாவைக் காண பல பேர் கூடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %
error: Content is protected !!