‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்னே சிறுவர்களுக்கு பட்டாசு ஓ(ஆ)சை வந்துவிடும். வயது வித்தியாசம் இல்லாமல் அவரவர் வயதுக்கேற்ப பட்டாசுகள் உள்ளன. சிறுவர்களுக்கு சிறிய வெடிகளும், பெரியவர்களுக்கு பெரிய வெடியும், பெண்களுக்கு இரவு வெடிகள் சுருசுருவத்தி, சாட்டி, பூந்தொட்டி போன்ற வானவேடிக்கை வெடிகள் உள்ளன.
சிறுவர்கள், பெண்கள் வெடிகள் ஆபத்தில்லாதவை. ஆனால் வாலிபர்கள் வெடிக்கும் வெடிகளான ஆட்டோபாம், சரவெடி, தவுசன்வாலா, டென்தவுசன்வாலா, இன்னும் அதிக சத்தம் தரும் வெடிகள், ராக்கெட் போன்ற வெடிகள்தான் மிக ஆபத்தானவை.
இந்த வெடிகளை வெடிப்பதற்கான நேரங்களை நீதிமன்றங்கள் மூலம் காவல் துறை நடைமுறைப்படுத்த நேரங்களை அறிவித்திருக்கிறது.
வருகிற தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி யிருக்கிறது நீதித்துறை.
அதிக ஒலியெழுப்பும் சரவெடிகளையும்; எளிதில் தீப்பற்றக்கூடிய இடங் களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் – தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்களைப் பொறுத்தவரை தீபாவளியன்று குறைந்த ஒலியுடன் குறைந்த காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியுடன் திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளைத் தவிர்க்க வும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு களை வெடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடை யும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி நேரக் கட்டுப்பாட்டை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால், சுற்றி இருக்கக்கூடிய நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடாத வகையிலும், ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப் படாத வகையில் நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே நீதிமன் றம் அனுமதியளித்தது.
அதேபோல் இந்த ஆண்டும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் நலப் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.