தீபாவளிப் பண்டிகை வருகிற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடச் செல்லும் மக்கள் பஸ், ரயில்களில் முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர். சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தனிநபர் வாகனங்களில் சொந்த ஊர் செல்வோர் தாம்பரம் – செங்கல்பட்டு பாதையைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்துத் துறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் பண்டிகையைக் கொண்டாடச் செல்வது வழக்கம். அந்த வகையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்னும் தீபாவளிக்கு 3 நாட்களே இருப்பதால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பஸ்களின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுன்டர்கள் தொடங்கப்பட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 61 ஆயிரம் பேரும் மற்ற மாவட்டங்களுக்கிடையே 89 ஆயிரம் பேரும் என 1.51 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்வோர் சென்னை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தாம்பரம் – பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாகப் பயணத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.
அதோடு இந்த ஆண்டுக்கான சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது தமிழகப் போக்குவரத்துத் துறை.
- புதிய போக்குவரத்து விதியை நேற்று (19-10-2022) நள்ளிரவு முதல் அமல்படுத்தியது சென்னை போக்குவரத்துக் காவல்துறை.
- சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தாலும், தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்தினாலும்,
- அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை ஓட்டினாலும், வாகனப் பந்தையங்களில் ஈடுபட்டாலும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும்.
- மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போதை தரும் மருந்தை உரிய பரிந்துரை இல்லாமல் விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- உரிய மருந்துச்சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய மருந்துகள் சமீபகாலமாக விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.
- இரு சக்கர வாகனம் கார்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுநருடன் அமர்ந்த பயிண்ப்பவருக்கும் அபராதம் வித்திக்கப்படும் என த் தெரிவித்துள்ளது. அதற்கு அபராத் தொகையாக ரூபாய் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை தண்டம் வசூலிக்கப்படும் எனத் காவல் துறை தெரிவித்துள்ளது.
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.100லிருந்து ரேசில் ஈடுபடுவோருக்கு ரூ. 15 ஆயிரம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.