‘ஜெய்பீம்’ படத்தைப் பின்தள்ளி ஆஸ்கார் வென்ற ஆவணப்படம்

0 0
Spread the love
Read Time:6 Minute, 36 Second

அமெரிக்காவில் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருது ஆஸ்கார். அந்த விருதில்
2021ஆம் ஆண்டுக்கான அயல்நாட்டு மொழிப் பிரிவில் ‘ரைட்டிங் வித் ஃபயர்’ ஆவணப்படம் கடைசிச் சுற்றுக்குத் தேர்வாகி இருக்கிறது. தமிழ் மொழி படமான ஜெய் பீமை ஓரங்கட்டி இந்தப் படம் வந்திருக்கிறது.

ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சூர்யாவின் ‘ஜெய்பீம்’ மற்றும் மோகன்லாலின் ‘மரக்காயர்: அரபிக்கடல் சிங்கம்’ போன்ற திரைப்படங்களும் மற்றும் 279 தகுதி பெற்ற திரைப்படங்களுடன் பந்தயத்தில் இருந்தன. ஆனால் இறுதிக் கட்டத்தை ரைட்டிங் வித் பயர் வெற்றிபெற்றது.

ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப்படம், நாட்டின் கிராமப்புறப் பகுதியில் ‘கபர் லஹரியா’ என்ற பத்திரிகையை நடத்தி வரும் தலித் பெண் பத்திரிகையாளர்களின் கதையை விவரிக்கிறது. பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் போன்ற தலைப்புகளை வலியுறுத்தும் அதே வேளையில் செய்தித்தாள் அச்சிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதை இது காட்டுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ரிந்து தாமஸ்.

தலித் பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் ஒரே பத்திரிகையான ‘கபர் லஹரியா’வின் எழுச்சியை விவரிக்கும் ‘ரைட்டிங் வித் ஃபயர்’, படத்துக்கு மேலும் ‘சன்டான்ஸ் திரைப்பட விழா 2021’ இல் ‘உலக சினிமா ஆவணப்படம்’ பிரிவில் பார்வையாளர் விருதை வென்றது. சுதந்திரமான கலைஞர்களைக் கண்டறிந்து ஆதரிக்கும் மற்றும் அவர்களின் படைப்புகளுக்குப் பார்வையாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமான ‘சன்டான்ஸ் ஆர்கனைசேஷன்’ மூலம் வழங்கப்பட்டது.

இந்தப் படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள் மட்டுமே இணைந்து அவர்களால் தொகுக்கப்பட்ட செய்திகள் கடந்த 2002 தொடங்கி இத்தனை ஆண்டுகளாக காகிதத்தில் இருந்து இணையம் வரை கடந்து வந்த பாதைகளை நம் கண் முன்பே காட்டுகிறது.

khabar lahariya என்பதுதான் அந்தச் செய்தித்தாள். அதை நிர்வகிக்கும் தலைவி மீராவுக்கு 14 வயதில் திருமணம். அதையும் தாண்டி அவள் பட்டமேற்படிப்பு படித்து அவர்களுக்காக உழைக்கிறாள், தன்னுடைய கணவனுக்குப் பிடித்தம் இல்லாமலேயே.

இந்தச் செய்தித்தாள் 2002 முதல் இன்றுவரை youtube channalலாக மாற்றம் வரை தொடர்கிறது. முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட பெண்களால் நடத்தப்படுவதே. இதுவும் ஒரு புரட்சிதான். ஏனெனில் அவர்கள் நடத்தும் மாநிலம் உத்தரபிரதேசம்.

ஆரம்பிக்கும் முதல் சம்பவமே 2016இல் ஒரு குக்கிராமத்தில் ஒரு பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார். ‘கதவை உடைத்து என்னைப் பலவந்தமாகக் கற்பழித்தனர் பலமுறை’ என்று அந்தப் பேட்டியில் சொல்கிறாள் அந்த பெண்மணி. ‘காவல்துறையிடம் புகார் அளித்தீர்களா?’ எனக் கேட்டதற்கு அடையாளம் காணமுடியாத நபர்களுக்காக இந்தப் புகாரை வாங்க மறுக்கின்றனர். அது மட்டுமில்லாது மீறி காவல்துறை சென்றால் கொலை செய்துவிடுவோம் எனக் கூறுகிறார்கள் என்று கூறுகிறாள் அந்தப் பெண்மணி. இந்தப் புகாரை எடுத்துக்கொண்டு காவல்துறையிடம் செல்லும்போது காவல்துறையினர்களோ பதிவு செய்து இருக்கிறோம் என்று கூறி அந்தப் பெண் பத்திரிகையாளரை அனுப்புகிறது.

இதேபோல் ஒரு கற்பழிப்பு, தற்கொலை என ஒடுக்கப்பட்ட மக்களை வேட்டையாடும் கயவர்களையும் மதத்திற்குப் பின்னால் இருக்கும் மனிதர்களையும் அந்த மாநிலத்தின் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கிறது khabar lahariya பத்திரிகை.

ஆனால் நடப்பது என்ன? 2014இல் இருந்து இன்றுவரை 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போதைய செய்தி

2022 நவம்பர் 30

மத்தியபிரதேச மாநிலம், ரைசென் மாவட்டத்தில் உள்ள லம்பக்கெடா கிராமம் அருகே, ஒரே பைக்கில் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், பக்கத்து கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியைப் பறிமுதல் செய்து டிரைவரைத் தேடி வருகின்றனர். விபத்தில் உயிர் இழந்த மூவருக்கும் மத்தியபிரதேச முதல்வர் இரங்கலை தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு இதுதான் நிலை.

இந்த ஆவணப் படம் பார்க்கவேண்டிய ஒன்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!