

1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ படம் கமல்ஹாசனுக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. அது தமிழ் சினிமாவிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். தற்போது கமல்ஹாசனின் விக்ரம் வெற்றிக்குப் பிறகும் மணிரத்னத்தின் பொன்னியில் செல்வன் படம் வெற்றிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் – கமல்ஹாசன் இணைந்து படம் தயாராகிறதாக டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
‘நாயகன்’ படத்தில் இருவரும் இணைந்து தந்த வெற்றிக்குப் பிறகு 35 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் ‘நாயகன்’ மும்பை ‘தாதா’ குறித்த உருக்கமான கதை. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட் அடித்தது.

தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்’திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கான அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல கமலை பொறுத்தவரை அவரது ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்று ரூ.450 கோடி வரை வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைவதாக வந்த அறிவிப்பு ரசிகர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நாயகன் KH234 பயணத்தின் அடுத்த கட்டம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதில் மணிரத்னம் படக்கம்பெனியான மெட்ராஸ் டாக்கீஸ், இசை ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின், மற்றும் ஆர். மகேந்திரன், சிவ ஆனந்த் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸும் தயாரிக்கிறது.
படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கமலின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.