டூயல் சிம் (Dual SIM) மற்றும் டூயல் நெட்வொர்க் ஆக்ஸலரேஷனை (Dual Network Acceleration) கொண்ட லாவா (Lava) நிறுவனத்தின் அக்னி 5ஜி (Agni 5G) ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் இங்கே பேசுகிறோம்!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், தென்கொரிய பிராண்ட் ஆன சாம்சங், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் போன்ற பிரபலமான மொபைல் போன் தயாரிப்பாளர்களே, தத்தம் மொபைல் போன்களுக்கு 5ஜி-க்கான ஆதரவை முழுமையாக வழங்க முடிக்காத நிலையில்.. இந்திய மொபைல் பிராண்ட் ஒன்று தனது 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்கான ஆதரவையும் அறிவித்துள்ளது!
டூயல் சிம் (Dual SIM) மற்றும் டூயல் நெட்வொர்க் ஆக்ஸலரேஷனை (Dual Network Acceleration) கொண்ட லாவா (Lava) நிறுவனத்தின் அக்னி 5ஜி (Agni 5G) ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் இங்கே பேசுகிறோம்!
லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, அக்னி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதிய சாப்ட்வேர் அப்டேட் (Software Update) கிடைக்கும். அந்த அப்டேட் வழியாக அக்னி 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவின் இரண்டு முக்கியமான 5ஜி நெட்வொர்க்குக்குமான ஆதரவும் கிடைக்கும். அதாவது ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்குமான ஆதரவும் கிடைக்கும்!
லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான அக்னி 5ஜி, வரும் நாட்களில் ஃபோட்டா அப்டேட்டை (FOTA update) பெற தொடங்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது! குறிப்பிட்ட அப்டேட்டின் சைஸ் என்ன, அந்த அப்டேட் உடன் ஏதேனும் பக் பிக்சஸ் (bug fixes) வருமா? சிஸ்டம் பெர்ஃபார்மென்ஸ் பிக்சஸ் (system performance fixes) வருமா? அல்லது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வருமா? போன்ற கேள்விகளுக்கான எந்த பதில்களும் இல்லை!
5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகரங்களில் உள்ள ஏர்டெல் + லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் குறிப்பிட்ட FOTA அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின்னர், Airtel 5G Plus-ஐ பயன்படுத்தத் தொடங்கலாம்! அதாவது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, நாக்பூர், வாரணாசி, சிலிகுரி மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ளவர்கள் ஏர்டெல் 5ஜி-யைப் பயன்படுத்தலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5G சேவைகளை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் சோதித்து வருகிறது. மேற்குறிப்பிட்ட நான்கு நகரங்களில் உள்ள அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள், குறிப்பிட்ட FOTA அப்டேட் வந்ததும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
வோடாபோன் ஐடியா, 5ஜி அறிமுகம் குறித்த தனது திட்டங்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதால், அக்கினி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்போது வி.ஐ. 5ஜி-க்கான ஆதரவை பெறும் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை!
முன்கூட்டியே 5ஜி சேவைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வெவ்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் இன்டர்நெட் சர்வீஸ் வழங்குநர்களுடன் (ISP Internet Service Providers) பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அந்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் முடிவடைந்த சில நாட்களுக்குப் பிறகு, லாவா நிறுவனத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!