தமிழகத்திலேயே முதல்முறையாக வனவிலங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் (Animal underpass Bridge) அமைக்கப்பட உள்ளது.
மதுரை டூ திண்டுக்கல் ரோடு வாடிப்பட்டி வகுத்துமலை பகுதியில் முதல் ‘அனிமல் பாஸ் ஓவர்’ பாலம் அமையும் தற்போது புது நத்தம் ரோடு கடவூரில் ‘அனிமல் அண்டர் பாஸ்’ பாலம் அமைக்க மாவட்ட வன, தேசிய நெடுஞ்சாலைத் துறைகள் தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
வன உயிரினங்கள் கடந்து செல்ல மதுரை மற்றும் திண்டுக்கல் எல்லையை ஒட்டிய வாயுதமலை பகுதியில் வாடிப்பட்டி – தாமரைப்பட்டி நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்றை கட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
‘பாரத் மாலா பரியோஜனா’ திட்டத்தில் வாடிப்பட்டி முதல் புதுநத்தம் ரோட்டை கடந்து சிட்டம்பட்டி வரை ரூ.555 கோடியில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2018ல் துவங்கி நடக்கிறது.
தற்போது 80 சதவிகிதப் பணி முடிந்தது. இந்த நெடுஞ்சாலை பாலமேடு அருகே வகுத்துமலை பகுதியில் உள்ள 2 மலைகளை கடந்து செல்கிறது.
அங்குள்ள அரிய வகை வன விலங்குகளை காக்க ஒரு மலைக்கும், மற்றொரு மலைக்கும் இடையில் 210 மீட்டர் துாரத்திற்கு ‘அனிமல் பாஸ் ஓவர்’ பாலம் அமைக்க கடந்தாண்டு வன, தேசிய நெடுஞ்சாலை துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் அரிய வனவிலங்குகள் வாகனங்களில் சிக்கி பலியாகாமல் இயற்கை சூழலில் அமையும் பாலம் வழி வனம், மலைகளுக்கு செல்ல முடியும்.
இந்த நெடுஞ்சாலை பாலமேடு அருகே உள்ள வகுத்தமலை வனப்பகுதியினுள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வனப்பகுதியில் உள்ள அரிய வகை விலங்கினங்களை காக்கும் வகையிலும், அவை ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலைப்பகுதிக்குச் செல்லவும் 210 மீட்டர் தூரத்திற்கு இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் வனவிலங்களுக்கான மேம்பாலம் (Animal Passover Bridge) அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதே போல் நெடுஞ்சாலை துறை மதுரை புது நத்தம் ரோடு ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் கட்டியது. ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 4 வழிச்சாலையாக மாற்றியது. புதிய ரோடு கடக்கும் சத்திரப்பட்டி, கடவூர், வேம்பரளி உள்ளிட்ட கிராம வனப்பகுதிகளில்அரிய வனவிலங்குகள் உள்ளன. வாடிப்பட்டி ‘அனிமல் பாஸ் ஓவர்’ பாலம் போல் கடவூரிலும் அமைக்க நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாகத் தற்போது வனத்துறை அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
வாடிப்பட்டி-தாமரைப்பட்டி நெடுஞ்சாலையில் விலங்குகள் உயிரிழப்பு மற்றும் மனித-விலங்கு மோதலைத் தடுக்கும் முயற்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மதுரை மற்றும் மதுரையை ஒட்டியுள்ள வாவுத்தமலை காப்புக் காட்டில் ‘விலங்குக் கடவு மேம்பாலம்’ அமைக்க முன்மொழிந்துள்ளது. சமீபத்தில் மாநில வனத்துறைக்கு அனுப்பப்பட்ட திட்டத்தில், இந்த பாலம் நெடுஞ்சாலையில் வாகனங்களால் தாக்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அழகர் கோவில் மலைகள், நத்தம் அருகே உள்ள கிழுவமலை மற்றும் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் மலை ஆகியவை வவுத்தமலை வனப்பகுதியாகும். பெரிய பூனைகள் மற்றும் யானைகள் இங்கு காணப்படவில்லை என்றாலும், அதிக எண்ணிக்கையிலான முயல்கள், காட்டெருமைகள், நரிகள், பன்றிகள் மற்றும் பாம்புகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.
என்.எச்.ஏ.ஐ. அதிகாரி ஒருவர் பேசும்போது, “பாலம் கட்டுவதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், திட்ட மதிப்பீடு ரூ.12 கோடி என்றும் கூறினார். இந்த திட்டத்திற்கு ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லில் உள்ள 29.9 கிமீ நீளமுள்ள வாடிப்பட்டி-தாமரைப்பட்டி என்ஹெச்ஏஐ ரிங் ரோட்டில் 210 மீட்டர் தூரம் இந்த காப்புக்காடுகளின் கீழ் வருகிறது. முன்மொழியப்பட்ட பாலத்தில் ‘பக்கா’ வேலிகள் மற்றும் இயற்கை சூழல் இருக்கும். மண், மரங்கள் மற்றும் புல் அடங்கிய பாலத்தின் மேல் உருவாக்கப்படும்.அடுத்த ஆறு மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
மாவட்ட வனஅலுவலர் குருசாமி தபாலா கூறும்போது, “மதுரை கடவூர் அருகே அழகர்மலை வனங்களில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கும் ரோடு அமைக்கும் நிலையில் வனவிலங்குகள் வாவிடம் தேடி அலையும். அதனால் கடவூர், எதிரேயுள்ள அழகர்மலை வனத்திற்கு ரோட்டின் கீழே வனவிலங்குகள் செல்ல அனிமல் அண்டர் பாஸ் பாலம் அமைகிறது. எங்கள் பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது. ஓவர் பாஸ் பாலப் பணியும் விரைவில் தொடங்கும்
தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் வனவிலங்குகளுக்கான மேம்பாலத்தை அமைப்பதற்கான ஆய்வுகள் முடிவடைந்துள்ளது. இந்த திட்டம் சுமார் 12 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த மேம்பாலத்தின் மேல் மணல், மரம், புற்கள் அமைக்கப்பட்டு இயற்கையான தோற்றம் உருவாக்கப்படும். இப்பாலத்தின் கீழ் சிறிய விலங்குகள் செல்ல 2.5 மீட்டர் அளவில் பாதை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தில் வாசனை, ஒலி மற்றும் ஒளி தடுப்புகள், வேலிகள் ஆகியவை அமைய உள்ளன. விலங்குகளுக்கு ஏதுவாக நீர் குளங்களையும் மற்றும் பிற வசதிகளையும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளோம். இந்த மேம்பாலம் அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.