சதாம் உசேன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஈராக்கில் மன்னராட்சியை சர்வாதிகாரியாக நடத்திக்கொண்டிருந்தார். எண்ணெய் வளநாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருந்த நேரத்தில் அவர் ஆளும் ஈராக்கில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி அவர் நாட்டின் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. சதாம் உசேனைக் கைது செய்து தூக்கிலிட்டது. கடைசியில் அந்த நாட்டில் அணுஆயுதம் தயாரித்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கண்டறியப்பட்டது.
சதாம் உசேனைத் தூக்கிலிடப்போவதற்கு முன் அவரிடம் உங்கள் கடைசி ஆசையைக் கூறுங்கள் நிறைவேற்றி வைக்கிறோம் என்று அமெரிக்க ராணுவத்தினர் கேட்டபோது சதாம் உசேன் கேட்ட கடைசி ஆசை கடலும் கிழவனும் என்கிற நூலைப் படிக்கவேண்டும் என்பது.
கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ தனது காரில் எப்போதும் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்று இது.
தமிழகப் பாடநூலில் இந்தக் கதை 7ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் படக்கதையாக இடம் பெற்றுள்ளது.
இந்த நூல் உலக மொழிகளில் பற்பல மொழியாக்கம் கண்டது. தமிழிலும் பலர் மொழியாக்கம் செய்துள்ளனர். இந்தப் புதினம் பல மொழிகளில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 27 ஆயிரம் சொற்களைக் கொண்ட குறுநாவல இது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடலும் ஒரு கிழவனும் (The Old Man and The Sea) என்கிற இந்தப் புதினத்தை அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே 1951ஆம் ஆண்டு கியூபாவில் எழுதப்பட்டு, 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர் அவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால், கடந்த 84 நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர். இப்போதெல்லாம் தனியாகவே மீன்பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ. அன்று 85வது நாள்…
பல நாள் போராட்டத்திற்குப் பிறகு 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கிறது. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார்.
மீன் பிடிக்கும் ஓர் கிழவனும் ஓர் சிறுவனும் இக்கதையின் கதை மாந்தர்கள். இது ஹெமிங்வேவால் உருவாக்கி மற்றும் அவரது வாழ்நாளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய புனைவின் கடைசி முக்கிய பணியாக இருந்தது. அவரது மிகவும் பிரபலமான எழுத்துப் பணிகளில் ஒன்றான இது, வளைகுடா நீரோடையில் ஒரு பிரமாண்ட மார்லின் (கொப்பரக்குல்லா) மீனுடன் போராடும் ஒரு வயதான மீனவரை மையப்படுத்துகிறது. இந்த நூல் 1953ல் புனைவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டதோடு 1954ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
எர்னஸ்ட் ஹெமிங்வே வாழ்க்கை வரலாறு
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெமிங்வே 1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்பார்க் எனும் ஊரில் பிறந்தார். தந்தை மாக்டர் கிளாரன்ஸ் எர்னஸ்ட் ஹெமிங்வே. தாய் கிரேஸ்ஹால்.ஹேமிங்வே உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பள்ளிக்கூடப்பிரசுரங்களில் எழுதத் தொடங்கினார். கல்லூரியில் பட்டம் பெற்றதும் கான்ஸஸ் சிட்டி ஸ்டார் என்கி றபத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிறகு செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். பீன் பிடித்தல், வேட்டையாடுதல், விளையாட்டு, வீரச்செயல்கள் போன்றவற்றில் ஆர்வமுடையவர் ஹெமிங்வே. சூரியனும் எதிர்க்கிறது என்கிற நூலைத்தான் முதலில் எழுதினார்.
முதலாம் உலகப் போரின்போது, பிரான்சின் பாரிஸில் ஆம்புலன்ஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். 1930களில் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நிருபராகப் பணியாற்றினார். இந்த அனுபவங்கள் அனைத்தும் எர்னஸ்டின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதால், தி சன் ஆல்ஸ் ரைசஸ், எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ் மற்றும் ஃபார் ஹூம் தி பெல் டோல்ஸ் உள்ளிட்ட அவரது மிகவும் குறிப்பிடத்தக்க புனைகதை படைப்புகளுக்கு உத்வேகமாக அவற்றைப் பயன்படுத்தினார்.
இவர் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகளைக் குறைத்துக்கொண்டு நேரடியான பாணியில் எழுதினார். அது இன்றுவரை வாசகர்களால் படிக்கப்படுகின்றன.
இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தபோது ஒரு விமான விபத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஹெமிங்வே நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதன்பிறகு 1961ஆம் ஆண்டு தனது 62வது வயதில் இறந்தார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
அவர் இறந்தாலும் அவரது படைப்புகள் வாழ்ந்துகொண்டிருக்கும்.