0 0

‘வாத்தி’ 8 நாட்களில் 75 கோடிக்குமேல் வசூல் || இயக்குநர் மகிழ்ச்சி

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்த நிலையில்  முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ்.  தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.  ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே  மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது வாத்தி. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்குப்  பக்கபலமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து  நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக வாத்தி வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுகள் என  பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வம்சி, படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. வாத்தியைத் தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இதில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்.
1 0

“வாத்தி என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது” பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழல் ‘வாத்தி’ என்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி,...
1 0

“தனுஷுடன் நடிக்க பயந்தேன்” || ‘வாத்தி’ நாயகி சம்யுக்தா OpenTalk

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில்  நாகவம்சி S - சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப்...
1 0

கலைப் படைப்பை மக்களுக்காகப் படைத்தவர் பாலு மகேந்திரா

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் 1946, மே 19ஆம் தேதி பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற...
1 0

ரஜினிக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா

ரஜினிகாந்த் ரசிகர்கள்  அவரது படங்கள் வெளியாகும்போதெல்லாம் வாணவேடிக்கைகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதே மனநிலையில் ரசிகர்கள் தற்போது வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கும் தயாராகி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து விலகிய ரஜினி சினிமாவில் முழு கவனம் செலுத்திவருகிறார். கலாநிதி...
1 0

இனி நல்ல படங்கள் வருமா? || ‘ஸ்கிரிப்டிக்’ திரைக்கதை வங்கி தொடக்கம்

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை...
0 0

தனுஷ் நடித்த ‘வாத்தி’ டைரக்டர் சொன்ன புதிய தகவல்கள்

”கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம்தான் வாத்தி கதை உருவாக காரணம்” -மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரி. சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில்  நாகவம்சி S - சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ்,...
0 0

‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’ இசை வெளியீட்டில் காரசாரம்!

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களைக் கவரும்வண்ணம் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள்...
1 0

இயக்குநர் கே.விஸ்வநாத் இறப்பு || ஈடு செய்ய முடியாதது

சங்கராபாரணம், சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து போன்ற படங்களின் இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் (2-2-2023) காலமானார். தமிழ் தெலுங்கு சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல், 'யாரடி நீ மோகினி', 'ராஜபாட்டை', 'லிங்கா', 'உத்தம...
1 0

சிம்புவின் ‘பத்துதல’ வெளியிடத் தயார் நிலையில் உள்ளதா?

சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப்...
error: Content is protected !!