0 0

மகா சிவராத்திரியில் அறிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்கள்

மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். கன்னியாகுமரியிலும் பன்னிரு சிவாலயங்களில் விசேஷ பூஜை நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும்...
1 0

உலகம் போற்றும் தைப்பூசத் திருநாளின் விசேஷம் என்ன?

அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன்...
1 0

தை அமாவாசையின் சிறப்பும் பொறுப்பும்

ஒரு உண்மையான மகன் அமாவாசைதோறும் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யவேண்டும். அமாவாசையன்றுதான் எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால் அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் உறவுகளைப்...
1 0

அகிலம் போற்றும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும்...
1 0

லிங்கங்களின் தரிசனம் – கீசர குப்தா

நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம். பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான...
1 0

மலேசியாவில் வள்ளலார்

மலேசியா முருகன் கோவிலை இயற்கையாக limestone படிமங்களுடன் உள்ள குகைகளுக்குள் அமைத்துள்ளார்கள். பக்கத்திலுள்ள குகைகளில் அனைத்து புராண நிகழ்ச்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளார்கள். பார்த்துக்கொண்டே வரும்போது வடலூர் வள்ளலார் உருவமும் அதன் மேல் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வள்ளலாரின்...
1 0

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு என்ன சிறப்பு?

18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகவும் கனிவுடனும் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நாமக்கல்லின் தெய்வீக அடையாளம். நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (23-12-2022) ஜெயந்தி. அதை முன்னிட்டு அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. புராண வரலாறு முன்னொரு காலத்தில் மகாலட்சுமி,...
2 0

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் வரலாறு

திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில்....
1 0

ஆத்மபலம் தரும் ஐப்பசி மாதப் புனித நீராடல்

பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது.  இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள்....
0 0

சரஸ்வதி பூஜையின் தனிச்சிறப்பு

கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடு கிறோம். அதை முன்னிட்டு ஒன்பது நாட்கள் வீடுகள் தோறும் கொலு வைத்து சொந்தம் பந்தங்களை அழைத்து சரஸ்வதி...
error: Content is protected !!