இனிப்பான புத்தகங்களும் புளித்த ஊறுகாயும்
சென்னை நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46வது புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். பல அரங்குகளில் குவிக்கப்பட்டிருந்த அறிவுக் களஞ்சியமான நூல்களைப் பார்வையிட்டேன். குறிப்பாக, சிறப்பாக எல்லா கடைகளிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் குவிக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பொ.செ. அதிக அளவில் பதிப்பகங்கள்...