3டி-யில் வெளியாகிறது ‘ஷாகுந்தலம்’

1 0
Spread the love
Read Time:2 Minute, 49 Second

உலகப் புகழ்பெற்ற காளிதாசின்  ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினைத் தழுவி எடுக்கப்படும்  ‘ஷாகுந்தலம்’ மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி வெளயாகும் என படக்குழு முன்னர்  அறிவித்திருந்தனர். ஆனால் தற்பொழுது வேறொரு நாளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

மக்கள் அனைவரும் இப்படத்திற்குத் தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.  புராதனக் கதையை இன்னொரு பரிமாணத்தில் காண்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

‘ஸாகுந்தலம்’ படத்தை மெருகேற்றும் விதமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட உள்ளனர். முழுமையாக 3டி-யில் படத்தினை எடுத்து முடித்த பின்னரே ரிலீஸ் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தனின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை சமந்தா ஷகுந்தலையாகவும், தேவ் மோகன், ராஜா துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர்.

அழகிய கதைக்களம் என்பதனைத் தாண்டி, இந்தப் படத்தில் திறமைமிகு  நட்சத் திரப் பட்டாளத்தைக் காணலாம். சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித் துள்ளனர். படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா இளவரசர் ‘பரதர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு,  குணா டீம் வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா தயாரிக்க, குணசேகரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் விரைவில் 3டி – யில் வெளியாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!