பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐ.எம்.டி.பி. 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகரும், Global Iconனுமான நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் வாயிலாக, முதன்முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதிவு செய்தார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர்.
V கிரியேஷன்ஸ் கலைப்புலி S. தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும். ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘வடசென்னை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் ‘வாத்தி’ படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்டத் திரைப்படங்கள்.
தனுஷின் தனித்தன்மைகள்
தமிழ் சினிமாவில் தனிமுத்திரை பதித்துவரும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பல பிரிவுகளில் பணியாற்றிப் புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவைத் தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவில் பிரீமியர் ஷோ நடந்தபோது, நடிகர் தனுஷ் செம்ம கெத்தாக மகன்களுடன் கோட் சூட்டில் கலந்துகொண்டு மாஸ் காட்டினார். இதனையடுத்து, மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட் சூட்டில் வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர். ஆனால், நடிகர் தனுஷ் கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார். இதன் பின், நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினார்.
IMDb-ன் ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022’ பட்டியலில் இடம் பிடித்தவர்கள்.
இதில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தி நடிகை ஆலியா பட்டும் மூன்றாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடங்கல் நடிகர் ராம்சரண், நடிகை சமந்தா, நடிகர் ஹ்ருத்திக் ரோஷன், நடிகை கைரா அத்வானி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் மற்று யஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஒட்டு மொத்த இந்தியாவிலுமே, அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி, தென்னிந்திய, அதுவும், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடத்தைப் பிடித்திருப்பது கோலிவுட் ரசிகர்களுக்கு பெருமிதத்தைக் கொடுத்துள்ளது.
மேலும், முதல் பத்து இடத்தில், வெறும் மூன்று இடங்களில் மட்டுமே பாலிவுட் நடிகர்கள் இருப்பதால், வட இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.