ஒரு நாள் ஒரு தாய் தன் கனவில் கண்ட நீலநிறத்திலான ஒரு 12 அடி உயரமான ஒரு பெண்ணைப் பற்றி தன் மகனிடம் விவரிக்கிறார். பின் நாட்கள் கழிய அதைப் பற்றி மறந்தும் போய்விட்டார். ஆனால் அதைக் கேட்ட மகன் மறக்கவில்லை. பின் நாட்களில் அந்த ஒரு நூலிழையில் தன் கற்பனையை விரித்து ஒரு பிரம்மாண்டமான உலகையே சிருஷ்டித்து விட்டான்.
அவன் கடந்த 25 ஆண்டுகளில் இரு படங்களால் மட்டுமே king of the Box office ஆக மாறிய James Cameron அவன் படைத்த உலகம் Pandora. அவதார் என்று ஒரு கதையாக பேப்பரில் எழுதினால் சுவாரஸ்யமான ஒரு Science Fiction கதைதான். ஆனால் தான் எழுதிய அந்த 80 பக்க Draftஐ திரையில் காட்சியாகக் கொண்டுவர James Cameron செலவிட்ட காலமும் உழைப்பும் அசாதாரணமானது.
‘டைட்டானிக்’குக்கு முன்பே 1994ல் முழுமையாக 80 பக்கத்தில் ‘அவதார்’ படத்தின் கதையை உருவாக்கிவிட்டாலும் 1997ல்தான் தன் கனவுப் படைப்பான ‘அவதார்’ படத்துக்கான பணிகளை ஆரம்பித்து 1999ல் படம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தக் காலத்தின் Technology கதையின் காட்சிகளைத் திரைக்குக் கொண்டுவர இடம்கொடுக்கவில்லை. அதனால் அதுவரை சில வருடங்களுக்கு ‘அவதார்’ படத்துக்கான Pre Production தள்ளிப் போடப்பட்டது. ஆனால் அந்தச் சமயத்தில் வேறு ஒரு படத்தை இயக்கலாமே? என்று கேட்கப்பட்டதற்குத் தலைவனின் Thug Reply
“என்னை பொறுத்தவரை ‘அவதார்’ படத்தைவிட்டு வேறு படத்துக்குச் செல்வது ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு குழந்தைக்குத் திட்டமிடுவது போன்றது” என்றார்.
என்ன கடைசியில் குழந்தை பிறக்க வருடக்கணக்கில் ஆகிவிட்டது. ஆனாலும் ‘டைட்டானிக்’ மாதிரி இதுவரை வரலாற்றிலேயே இல்லாத ஒரு ஹிட் கொடுத்தவர். தனது அடுத்த படத்துக்கு 12 வருடங்கள் இடைவெளி விட்டது ஆச்சரியமான ஒன்றுதான்.
அதன் பிறகு 2005ஆம் ஆண்டு வரை ‘அவதார்’ Scriptக்கான Background research Documentaries தயாரிப்பு, ஆழ்கடல் ஆராய்ச்சி என ஈடுபட்டிருந்த காலத்தில் ஹாலிவுட்டில் CGI மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்ததை உணர்ந்திருந்தார். Lord Of The Rings, King Kong என VFXல் பட்டைய கிளப்பிய WETA Digital அவதார் படத்துக்கான VFX பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் Pandora உலகைத் திரையில் சாத்தியப்படுத்துவதற்கான R&D பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
Technical Side ல் WETA DIGITAL ஒரு குழுவாக மற்ற பக்கம் WETA WORKSHOPல் Production Design க்கென தனியாக என இரு குழுக்களும் படிப்படியாக அவதாரை உருவாகிக் கொண்டிருந்தது. WETA ஒரு வருடமாக முழுவதும் அவதாரின் R & D பணிகளுக்காக மட்டுமே ஈடுபட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.
அடிக்கடி Pandoraஐ உலகம் என்று குறிப்பிட்டாலும் உண்மையில் Avatar Encyclopedia படி Polyphemus எனும் Gas giantன் நிலவாகவே கருதப்படுகிறது. ஆனால் பூமியுடன் ஒப்பிடும்போது 25% சிறியது. ஆம் அவதார் படத்துக்கென்று 1000 பக்கங்கள் கொண்ட Encyclopediaஐ அவதார் Script உடன் James Cameron உருவாக்கியிருந்தார். அதன் பின்னரான அவதார் பாகங்களில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவார்.
அவதார் படத்தின் முதல் பாகத்தின் விஷுவல் இன்றளவும் தரத்தில் நேர்த்தியாக இருக்கக் காரணம் படப்பிடிப்பில் கேமரூன் காட்டிய டெக்னாலஜி வித்தைதான். கதைப்படி இதுவரை எங்கும் கண்டிராத ஒரு உலகம் அதில் வாழும் உயிர்கள், இயற்கை, அதிசயங்கள் என பல விஷயங்கள் கேமரூன் தன் கனவிலும் கற்பனையிலும் கண்டவை.
எப்படி அவதார் உங்கள் சிந்தனையில் உதித்தது என்று கேட்டபோது “அவதாருக்கான Inspiration என்பது இதுவரை நான் கண்ட, கேட்ட, கற்பனை செய்த பல விஷயங்களில் இருந்து வந்தது” என்று கூறியிருந்தார்.
உதாரணத்துக்கு ஆரம்பத்தில் கூறிய அவரின் தாய்க்குக் கனவில் வந்த பெண் Pandora காடுகளின் Intro Shot இரவில் அந்தக் காடுகளின் Bioluminescence Effect என அப்படியே படத்தில் கொண்டு வந்திருந்தார்.
தான் உணர்ந்த அந்த பிரம்மாண்டமான உலகைப் பார்க்கும் ரசிகர்களையும் உள்ளே இழுக்கும் ஒரு உத்தியாகவே 3Dயை மிக Efficientஆ கையாண்டிருப்பார். அது அவதார் கதைக்கும் கண்டிப்பாகத் தேவைப்பபட்டது. இதற்காக எனவே James Cameron & Cinematographer Vince Pace இணைந்து படப்பிடிப்புக்காக பிரத்யேகமாக Fusion Camera System எனும் புதிய வகையிலான camera technologyயை உருவாக்கியிருந்தனர்.
இது இரண்டு கேமராக்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே காட்சியை Stereoscopic 3D முறையில் காட்சிப்படுத்த முடியும். எப்படி நம் இரு கண்கள் மூலம் நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் மூன்று பரிமாணங்களில் காட்சிப்படுத்தும் விதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன்மூலம் காட்சிகள் 3Dல் மிகத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. 2.0 திரைப்படமும் இதே Fusion Camera System மூலம் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக Motion capture Technology மூலம் உருவாக்கப்படும் CG Characters பார்ப்பதற்கு Animation கதாபாத்திரங்களின் தோற்றத்தையே கொடுக்கும். அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கேமரூன் மிகக் கவனமாக இருந்தார். ஏனென்றால் மற்ற படங்களைப் போலல்லாமல் மிகமிக Natural ஆக இதுவரை மனிதன் கண்டிராத ஒரு உலகில் வாழும் மக்கள் அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறை என படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தொடர்பாக வேண்டும். அதுவே பார்வையாளர்களை Act 3ல் நடக்கும் சம்பவங்களுக்கு நாவிக்களுக்கு ஆதரவாக இது சரிதான் என சமாதானப்படுத்தும்.
படத்தில் பெரும்பாலும் மனிதர்களைவிட நாவிக்கள் இடம்பெறுவதால் அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது. நாவிகள் கேரக்டர்சும் தனித்து ஒரு அனிமேஷன் கதாபாத்திரங்கள் போல படத்தில் காட்டப்படுமானால் பலருக்கு அது ஒரு அனிமேஷன் படத்தைத்தானே பார்க்கிறோம் என்ற உணர்வு இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான்.
இந்தப் பிரச்சினைதான் ‘கோச்சடையான்’ திரைப்படத்துக்கும் ஏற்பட்டது. அதனால் Pixar நிறுவனத்துடன் இணைந்து Pixar’s Renderman and Alfred Queue Management System என அவதாருக்காக பிரத்தியேகமாக இரு Softwares உருவாக்கப்பட்டது. இதன் மூலம் Motion capture மூலமாகப் படம்பிடிக்கப்படும் கதாபாத்திரங்கள் Photo Realistic CGI Characters ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாகவே அந்தப் பிரம்மாண்டமான உலகம் மிகத் தத்ரூபமாக இருப்பதை உணர்ந்திருப்போம்.
உண்மையில் சொல்லப்போனால் அவதாரில் கிட்டத்தட்ட 40%ற்கான காட்சிகளுக்கு மட்டுமே செட் போடப்பட்டு Live Action Shooting செய்யப்பட்டது. மிகுதி 60%ற்கும் அதிகமான காட்சிகள் முழுக்க முழுக்க Vfx Shotsகள் தான்.நாவிக்கள் மிருகங்கள் Pandoraக்கே உரித்தான இயற்கை அதிசயங்கள் அனைத்தும் நிஜத்தில் இல்லாத முழுக்க முழுக்க கற்பனையில் வடிவமைக்கப்பட்டவைதான். அப்படிப்பட்ட ஒன்றை Mocap செய்வதுடன் இயக்குவது மிகக் கடினம். படக்குழுவினருக்கும் ஜிம்மின் கற்பனைக்கும் அவரின் Thought processக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. வழக்கம்போல ஜிம் இதுக்காகவே ஒரு புது தொழில்நுட்பத்தை கையிலெடுத்துக் கொண்டார்…
இதுவரை பொறுமையாக யாராவது வாசித்திருந்தால் சின்ன Sorry abruptly cut பண்ணதுக்கு
Filimophobia தமிழ் என்கிற முகநூல் பக்கத்திலிருந்து