கலைப் படைப்பை மக்களுக்காகப் படைத்தவர் பாலு மகேந்திரா

1 0
Spread the love
Read Time:7 Minute, 18 Second

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் 1946, மே 19ஆம் தேதி பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான ‘செங்கோட்டை’யை கொழும்பு ‘சவோய்’ திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார்.

தான் பாடசாலையில் படித்தபோது பார்த்த சத்யஜித் ரே இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படம் தனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். பின்னர் ப்ரிட்ஜ் ஆப் ரிவெர் க்வாய் (Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும்போது பாலகன் பாலு மகேந்திரா அதனைக் காண நேர்கின்றது. அந்தத் தாக்கமே அவரை திரைப்படத் துறையில் ஈடுபாடுடைய வராக்குகியது இலங்கையில் சந்தர்ப்பம் கிடைக்காததனால் இந்தியா திரும்பினார்.

பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. 

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 

கெ.எஸ்.சேது மாதவனின் ‘சுக்கு’,’ ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். 

முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். 

பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், கன்னட, மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ணப் பூக்கள் ஆகியவற்றுக்கு பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார்.

சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருது பெற்ற ஒரே கலைஞர் பாலு மகேந்திரா.

சன் டி.வி.யில் வெளியான பாலு மகேந்திரா இயக்கிய ‘கதை நேரம்’ தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் சிறுகதைகளை சின்னத்திரை வழியாக்க காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு சென்றார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய பலர் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக தற்போது உள்ளனர். சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய பாலா, ராம், வெற்றி மாறன், சீமான், சுகா போன்றவர்கள் வெற்றி பெற்ற இயக்குநர்கள்.

படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார், “ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது.”

அவர் விட்டுச்சென்ற கலைப்படைப்பான சொக்கலிங்க பாகவதரை நடிக்க வைத்து அரசு சார்பில் வீடு பெற்றுத்தந்த வீடு, அர்ச்சனாவை அழகு தேவதையாகக் காட்டிய சந்தியாராகம், நடிகை ஷோபாவை அழகுப் பதுமையாகக் காட்டிய மூடுபனி கமல்ஹானுக்கு தேசிய விருது வாங்கித் தந்த மூன்றாம் பிறை, சில்க் சுமிதாவை நடிக்கவைத்த நீங்கள் கேட்டவை மறக்கமுடியாதது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவையும் அன்பையும் சொல்கின்ற தலைமுறை சிறந்த தயாரிப்புக்கான விருதையும் பெற்றது. அவர் கடைசியாக இயக்கிய படம் இது. இந்தப் படங்கள் அவரது கலைத்திறனை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும். அவரது நினைவு நாளை நினைவுகூர்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!