அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியாகி வைரலாகியிருக்கிறது.
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், நாயகன் நரியாக மாறும் முதல் இந்தியப் படம் ‘பெடியா’ திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த மெல்லிசைக் காதல் பாடலை மிகவும் சிறப்பான முறையில் கார்த்திக் பாடியுள்ளார். அழகான பாடல் வரிகளும் உணர்வுபூர்வமான இசையும் கேட்பவர்களைப் பரவசமடைய வைக்கின்றன.
‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடலைக் கேட்கும்போது அது எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கும் என்ற ஆவலும் திரையில் காண வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை அமிதாப் பட்டாச்சாரியா மற்றும் எஸ். சுனந்தன் எழுதியுள்ளனர். பாடலின் ஒலி வடிவம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் திங்கட்கிழமை அன்று முழு பாடலும் வெளியாகிறது.
இந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக ‘பெடியா’ டிரைலரை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டனர். பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் அமர் கௌசிக் பேசும்போது, ” திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டூடியோ கிரீன் பிரமாண்டமான முறையில் வெளியிட உள்ளது.