இன்றைய கணினி உலகில் தியேட்டர்களில் எத்தனைப் பேருக்கு டிக்கெட் வாங்கினாலும் ஒரே ஒரு கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்தான்…
மணிக்கணக்கில் கியூவில் நிற்க வேண்டியதில்லை…
ஆன் லைன் வசதி என சுவாரஸ்யமே இல்லாமல் சினிமா டிக்கெட் வாங்குவது சாதாரண விஷயமாகி விட்டது…
ஆனால் அன்று 80க்களில் சினிமா டிக்கெட் வாங்குவது என்பது ஒரு சுகமான அனுபவம்…
புதுப்படம் ரிலீஸ் சமயங்களில் சினிமா டிக்கெட் வாங்குவது ஒரு தனிக் கலை…
அன்றைய சினிமா டிக்கெட்களும் பல வண்ணங்களில் தமிழக அரசு வணிக வரித்துறை முத்திரைக் குத்தப்பட்டு பார்க்கவே தனி அழகுதான்…
நீண்ட நேரம் கியூவில் நின்று, கியூ நகர நகர நமக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற பரபரப்பு…
நம்முறை வந்தவுடன் எத்தனை டிக்கெட் என்று சொன்னவுடன் டிக்கெட் கொடுப்பவர் மின்னல் வேகத்தில் சடசடவென டிக்கெட்களை எண்ணிப் பிறகு புத்தகத்திலிருத்து கிழித்துத் தருவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்…
அவர் பணம் வாங்கிக்கொண்டு மீதி சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் தருவதும், அவர் காட்டும் பந்தாவும் இன்றும் மனதில் நிற்கிறது…
ஒருவருக்கு ஒரு டிக்கெட்தான் தருவார்கள்..
டிக்கெட் நம் கைக்கு வந்தவுடன் நமக்கு மனதில் மகிழ்ச்சிப் பொங்கும்.
அரங்கினுள் டிக்கெட் பரிசோதனை செய்வார்கள்…
புதுப்பட முதல் நாள் காட்சியைப் பார்த்த டிக்கெட்டுகளை பல நாட்கள் பத்திரமாக பாக்கெட்டில் வைத்து மகிழ்வார்கள்…
டிக்கெட்டில் செலுத்தும் தொகையில் கேளிக்கை வரி மற்ற விவரங்கள் இருக்கும்…
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கலர் என டிக்கெட்டுகள் பார்க்கவே அழகாக இருக்கும்…
காம்ப்ளக்ஸ் தியேட்டரில் முதன்முதலில் பெரிய சைஸ் டிக்கெட் பிரிண்ட் செய்து அசத்தினார்கள்…
மூன்று தியேட்டரில் கையில் டிக்கெட் பெட்டிகளுடன் டிக்கெட் கொடுப்பவர்கள் தியேட்டர் அலுவலகத்திலிருத்து வெளியில் வர வர கூட்டமே உற்சாகக் குரல் கொடுக்கும்…
புதுப்பட வெளியீடுகளின்போது பட விநியோகிஸ்தர் ஆபீஸில் டோக்கன் வாங்கிவிட்டால், நமக்குத் தனியே எடுத்து வைத்துத் தருவார்கள்…
ஹவுஸ் ஃபுல், அரங்கு நிறைந்தது போர்டுகள் இன்றும் நம் நினைவில் நிற்கின்றன…
‘மன்னன்’ படத்தில் ரஜினி கூட்டத்தில் முண்டியடித்து சட்டையைக் கிழித்து டிக்கெட் வாங்கியதைப் போன்ற அனுபவம் சினிமா ரசிகர்கள் வாழ்வில் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்…
படத்தைவிட படம் பார்க்க டிக்கெட் வாங்குவது அன்று ஒரு சவாலாகவும் வாங்கிய பின் மகிழ்ச்சியும் தரும்.
இனிமையான அனுபவமாக, மேலும் சினிமா டிக்கெட்கள் உயிர்ப்போடு இருந்த அந்தக் காலம் ஒரு பொற்காலம்தான்…
அன்றைய காலகட்ட சினிமா ரசிகர்களின் உலகம் தனிதான் கண்ணா…
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் கொடுக்கப்பட்ட டிக்கெட்தான் படத்தில் உள்ளவை..