ரசிகர்களால் மிகவும் அவலோடு எதிர்பார்க்கப்பட்ட, சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யசோதா’ படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரீஷ் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு விஷயத்தை கையில் எடுத்து திறம்பட படமாக்கிய காரணத்திற்காகவே இயக்குநர்களைப் பாராட்டலாம்.
இது ஒரு சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படம். நல்ல கதைத்தேர்வு மற்றும் அதற்கேற்ற முழு உழைப்பு தந்து இந்த படத்தை முழுவதுமாக தன் தோளில் சுமந்து சென்றுள்ளார் நடிகை சமந்தா. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் இரண்டாம் பாதியில் வரும் டிரான்ஸ்பர்மேஷன் காட்சிகளில் நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த உன்னி முகுந்தன், சத்ரு மற்றும் சம்பத் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வில்லி கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.
படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த உன்னி முகுந்தன், சத்ரு மற்றும் சம்பத் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
படத்தின் பெரும் பகுதி செட்டுக்குள் மட்டுமே நடக்கிறது. வாடகைத்தாயாக சமந்தா நுழையும் வீடும் அதற்குள் அமைந்த ஆர்ட் ஒர்க் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும்.
சமந்தா தன் தங்கைக்குச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதால் வாடகைத்தாயாகச் சம்மதித்து மருத்துவமனைக்குச் செல்கிறார். ஆனால் அங்கு அவரைப் போலவே பல பெண்களும் வாடகைத்தாயாக உள்ளனர்.
அப்போதுதான் அவருக்குத் தெரிகிறது. அங்கு வாடகைத்தாயாக வரும் பெண்களை வைத்து அங்குள்ள மருத்துவர்கள் வேறு ஏதோ சட்டவிரோதமான காரியங்களைச் செய்து வருவது சமந்தாவிற்குத் தெரிய வருகிறது.
உண்மையில் அந்த மருத்துவமனையில் நடப்பதென்ன? அங்கிருக்கும் வாடகைத்தாய்களின் நிலையென்ன? அவர்களின் பிடியில் இருந்து சமந்தா எப்படி தப்பித்தார்? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் சில இடங்கள் தொய்வை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதி நம்மை இருக்கையின் நுனியில் அமரும் வகையில் திருப்பங்களையும் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளாகட்டும், எமோஷனல் காட்சிகளாகட்டும் அனைத்திலுமே சமந்தா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போது ‘மயோசிடிஸ்’ என்கிற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நடிகை சமந்தாவுக்கு இந்தப் படத்தின் வெற்றி கண்டிப்பாக ஒரு புத்துணர்வைத் தரும் என எதிர்பார்க்கலாம்.