இந்தியாவின் முதல் ஓநாய் மனிதன் திரைப்படம் ‘பெடியா’

0 0
Spread the love
Read Time:4 Minute, 14 Second

ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘பெடியா’ படம் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் டிரைலர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் வருண் தவானின் 10-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்த டிரைலரை தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரம்மியமான காடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

புராணக் கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரைப் பற்றிய கதை இது. இந்த நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

டிரைலரில் வருண், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்தப் படத்திற்கு ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

டாப் கன் மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்ஜில்லா Vs காங் மற்றும் ஆட் அஸ்திரா ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் செய்து விருது பெற்ற நிறுவனமான எம்.பி.சி. இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநர் அமர் கௌஷிக் கூறுகையில், “இந்த டிரைலர் படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களைக் கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது,” என்றார்.

தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், “குறைந்த காலத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு படத்தை தருவதற்காக மேடாக் எடுத்துக்கொண்ட முயற்சியே பெடியா. தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். மிகுந்த திறைமைசாலியான் அமர் கௌஷிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது,” என்றார்.

வருண் தவான், கீர்த்தி ஷெட்டியுடன் தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜி நடித்துள்ள பெடியா நவம்பர் 25 அன்று பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!