திவாலானாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா? || கோர்ட்டில் மனு தாக்கல்

1 0
Spread the love
Read Time:6 Minute, 14 Second

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை திவாலானவராக அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஞானவேல் ராஜா நடிகர் சிவகுமாரின் உறவினர். 2006-ம் ஆண்டு இவர் ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.  இவர் தயாரித்த முதல் படம் 2006-ம் ஆண்டு வெளிவந்த சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல். பின்னர் பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா, சகுனி, அட்டகத்தி, கும்கி, அலெக்ஸ் பாண்டியன் மற்றும் மெட்ராஸ், இருட்டு அறையில் முரட்டுக் குத்து-1, 2ஆம் பாகம் போன்ற பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் திரைப்படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டூடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனர்.

இவர் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்தப் பணத்தைப் பலருக்கும் கடனாகக் கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார்.

இவரது சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் என்று அழைக்கப்படும் ஆபிஸ் அசைனி நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார். 

அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ம் ஆண்டு ரூபாய் 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியிருந்தனர்.

இந்தத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி  சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதில், 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு, 2013ம் ஆண்டு முதல் 18 சதவிகிதம் வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என்று சேர்த்து சுமார் 26 கோடியே 34 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், இந்தத் தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு  விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படப் பிரச்சினையில் சம்பளம் பேசியபடி தரவில்லை என சிவகார்த்திகேயன் நீதிமன்றவரை சென்றார். பிறகு அதை ஒப்புக்கொண்ட ஞானவேல் ராஜா அவருக்கு மீதி சம்பளம் தரப்போவதாகவும் அறிவித்தார். அதேபோல் நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார்.

அதேபோல் பைனான்சியர் போத்ரா ஞானவேல் ராஜாமீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் இறந்ததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்பு தயாரிப்பாளர் சங்கம் விதித்திருந்த தடையை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதால் ஞானவேல் ராஜா மீது ’ரெட்’ போட்டது தயாரிப்பாளர் சங்கம்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் திரையிட்டபோது பல்வேறு சமூக அமைப்புகள் அந்தப் படத்தின் ஆபாசத் திரையிடலுக்கு கண்டனம் தெரிவித்தன. அதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை ஞானவேல் ராஜாவும் சிவகுமார் குடும்பத்தினரும்.

இப்படி திரைத்துறைக்குள் நடிகர் சிவகுமார் குடும்ப உறவினர் என்கிற போர்வையில் நுழைந்த கொஞ்ச நாட்களிலேயே வேகமாக வளர்ந்தார் ஞானவேல் ராஜா. தொடர்ந்து பல வழக்குகளில் இவர் பெயர் அடிப்பட்டது. தற்போது அந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து திவாலானதாக அறிவிக்கும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு வழக்காகியுள்ளது. இதை எப்படி அணுகப் போகிறார்கள் நடிகர் சூர்யா, சிவகுமார் குடும்பத்தினர் என்பது பெரிய  கேள்வி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!