‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’ இசை வெளியீட்டில் காரசாரம்!

0 0
Spread the love
Read Time:5 Minute, 29 Second

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களைக் கவரும்வண்ணம் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர் தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசியதாவது “இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு ஃபீல் குட் திரைப்படம். இந்தப் படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் நன்றாக உருவாகி இருக்கிறது.” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியதாவது “ரவீந்தர் கலைஞர்களை மதிக்க கூடியவர். அவருடைய இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எனது நண்பர், அவருக்கு இது தான் முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.” என்றார்.

சிறப்பு விருந்தினர் நடிகர் ராதாரவி பேசியதாவது “நிதின் சத்யா, ரவிந்தர் இருவரும் எனது நீண்ட கால நண்பர்கள். நிதின் போன்ற உழைப்பாளிகளுக்கு உதவுவது அனைவரது கடமை. திரைக்கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் ரவீந்தர். அவர் அழைத்ததால்தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது “காதல் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் தேவை. தொடர்ந்து வெற்றிகரமான படங்களை எடுத்துவரும் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். இந்த படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ், அடுத்து தோனியின் தயாரிப்பில் படம் இயக்குகிறார். அவர் திறமைசாலி, அவருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது “இந்தப் படம் எல்லோருடைய வாழ்கையிலும் நடந்த ஒரு நிகழ்வாக இருக்கும்.” என்றார்.

நடிகர் அபிஷேக் பேசியதாவது “காதல் படங்கள் எடுப்பதற்கு ஒரு பொறுப்பு தேவை. படம் வெளியான பிறகு, ஒளிப்பதிவாளர் அனைவராலும் பேசப்படுவார். நிதின் சத்யா அனைவருக்கும் இடம் கொடுக்க ஆசைப்படுபவர். அனைவரையும் மேலே தூக்கி விட கூடியவர். இயக்குநர் உடைய அர்ப்பணிப்பு அனைவரையும், அவருடன் இணைந்து பயணிக்க வைக்கிறது. இந்த படத்திற்கு வெற்றிகள் குவிய வேண்டும்.” என்றார்.

இசையமைப்பாளர் தமிழ்மணி கூறியதாவது “எனக்கு வாய்ப்பளித்த தயரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படம் நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு படம்” என்றார்.

இயக்குநர் R.அரவிந்த் பேசியதாவது “புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அதையும் தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள். “

நடிகர் மகத் கூறியதாவது “இது எனது 16 ஆவது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குநர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியதாவது “நிதின் சத்யாவிற்கும், எனக்கும் இடையேயான புரிதல் சிறப்பானதாக இருக்கும். திரைப்படத்தை அதிக ஆர்வத்துடன் எடுக்க கூடியவர் நிதின். மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. விவேக் பிரசன்னா போன்ற ஆகச்சிறந்த நடிகர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், இவர்கள் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் தயாரித்ததில் இந்த படம்தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!