‘கும்பாரி’ – அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் படம்

0 0
Spread the love
Read Time:2 Minute, 33 Second

இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் கும்பாரி. இது ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கும்பாரி’ பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது
கும்பாரியின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்குப் பிறகு படத்தைத் திரையிடும் விதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.


இசை ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, படத்தொகுப்பு ; T.S.ஜெய், ஒளிப்பதிவு பிரசாத் ஆறுமுகம், சண்டைப்பயிற்சி மிராக்கிள் மைக்கேல், நடனம் ராஜுமுருகன், பாடகர்கள் ; அந்தோணிதாசன், ஐஸ்வர்யா, சாய்சரண், பாடல் வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி.

படம் பற்றி இயக்குநர் கெவின் சொல்லும்போது: “கும்பாரி காதல், காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலைச் சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். அவனை நாயகன் காப்பாற்றினாரா, இல்லையா என்பதுதான் கதை. படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு,  முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக  ஒரே கட்டமாக  நடத்தி முடித்துள்ளோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!