2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘3’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக இயக்கவுள்ள படம் ‘லால் சலாம்’. இந்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கின்றனர்.
‘லால் சலாம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். முதன்முறையாக தன் அப்பா ரஜினி காந்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா. ஏற்கெனவே இவர் தங்கை சௌந்தர்யா அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்துக்கு இயக்கினார். இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இசையில் புதிய வகையில் மிரட்ட உள்ளாராம்.
இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ், படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர், தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன், நிர்வாகத் தயாரிப்பாளர் N சுப்ரமணியன்.
மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தெரிவித்தார்.