முன்னணி தயாரிப்பாளர் நடிகையை மணந்தார்

0 0
Spread the love
Read Time:2 Minute, 3 Second

தமிழ்த் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் திருப்பதியில் இன்று (1-9-2022) காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமணத் தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்குத் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

தனது திருமணம் குறித்து பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், “மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் ஆனால் மகாலட்சுமியே எனக்கு வாழ்க்கையாகத் துணையாகக் கிடைத்திருக்கிறாள்” என்று கூறினார்.

ரவீந்தர் சந்திரசேகரன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய மகாலட்சுமி சங்கர், வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
50 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!