தமிழுக்குப் புதுவரவு இளம் நடிகை வி.ஜெ.அர்ச்சனா

1 0
Spread the love
Read Time:2 Minute, 55 Second

தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் வி.ஜெ.அர்ச்சனா. குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் லட்சோப லட்சம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர்.
அதன்பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிப்புத் திறமையால் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதனைத் தொடர்ந்து  ‘லவ் இன்சூரன்ஸ்’, ‘ட்ரூத் ஆர் டேர்’ ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் “எனக்குக் கல்யாண வயசு வந்துடுச்சி” என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
அண்மையில் ’ஸோனி மியூசிக்’, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான “தமாத்துண்டு…” எனும் பாடலில் நடித்துள்ளார். இப் பாடல் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிதத்தக்கது.


இவர் தன்னைப் பற்றிக் கூறும்பொழுது “நான் ஒரு தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்துவதால் நான் இயக்குநர்களுக்குப் பிடித்த நடிகையாகத் திகழ்கிறேன்” என்கிறார்.
திரைத்துறையில் சிறந்த கதாநாயகியாக வலம் வரவேண்டும் என்பதே இவரின் ஆசை. தற்பொழுது அருள்நிதி  நாயகனாக நடிக்கும் “டிமாண்டி காலனி – 2” என்ற திரைப்படத்தில் அருள்நிதிக்குத் தங்கையாக நடிக்க இருப்பதன்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் கால்பதித்துள்ளார்.  
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்று மிகுந்த ஆர்வத்துடன் கூறியுள்ளார்.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!