பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது PhantomFX நிறுவனம்

0 0
Spread the love
Read Time:11 Minute, 43 Second

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPOவிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது. பங்குச்சந்தையின் மூலமாக கணிச மான முதலீட்டைத் திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.

“நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்று சான்று அளிக்கப்பட்டிருக்கும் PhantomFX நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உலகத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பதற்காக, உயரிய தரத் துடன் டிஜிட்டல் ஸ்டூடியோக்களை உருவாக்கி தனது சிறகுகளைப் பரப்ப இருக்கிறது” என்கிறார் இதன் நிறுவனரும், நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.பிஜோய் அற்புதராஜ்.

VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள், எதிர்காலத்தில் மிகப் பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்றும் இவர் உறுதிபடக் கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு உலகி லேயே முதன்மையான VFX நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள் வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்திக்கொண்டு வருகிறது.

கொச்சி, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உயர்தரமான டிஜிட்டல் ஸ்டூடியோக்களை அமைக்கவும், ஏற்கெனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டூடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோயமுத்தூர், மதுரை ஸ்டூடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக பிஜோய் கூறினார்.

“உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டூடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளி நாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள் பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம்” என்றும் ஜோய்ஸ் கூறினார்.

சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டூடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும்” என்றார்.

“Phantom FX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும்போது திறமை யான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலை வாய்ப்புகள் பெரு மளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்கிறார் பிஜோய். VFX பிரிவில் திறமையுள்ள வர்களை உருவாக்கிவரும் இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடனும், மற்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து வேலை நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றைத் தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக PhantomFX நிறுவனத்தின் இயக்குநரும், முதன்மைச் செயல்வினை அலுவலருமான பினு ஜோஷ்வா தெரிவித்தார்.

உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது என்றும் அவர் கூறினார். விஜய் நடித்த ‘பீஸ்ட்’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’, ராஜமௌலியின் அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ‘ஜெய்பீம்’ போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக் கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப் படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்கவைக்கும் VFX காட்சிக் கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகக்கூடியது என்று அவர் கூறினார்.

“எண்ணற்ற சேவைகளை வழங்கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதர வளிக்கிறோம். செயற்கை அரங்குகளின் விரிவாக்கம், புழக்கடையில் உயிரினங்கள் ஊர்ந்து செல்லுதல் என்று எதுவாக இருந்தாலும் எங்களுடைய காட்சிக்கலையின் முழுமையான தொகுப்புகள் அந்தக் காட்சிகள் உண்மை யாகவே நடப்பது போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன என்றார் அவர். சுருக்கமாகச் சொல்வதானால், கனவு உலகங்களைப் படைத்தளிக்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. கற்பனைக் கதைகள், பழங்கதைகள் ஆகியவற்றிற்கு உயிரூட்ட எங்களால் முடிகிறது என்று பினு ஜோஷ்வா மேலும் கூறினார். படைப்பாக்கச் சேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வரும் இந்தியாவிலேயே மிகச் சிறந்த காட்சிக்கலை அரங்கங்களில் (VFX Studio) ஒன்றாக எங்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுக் கூறி வந்திருக் கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது நிர்வாக அலுவலகத்தின் மூலம் தனது ஹோலிவுட் வாடிக்கையாளர்களுக்கு PhantomFX சேவை புரிந்து வருகிறது. “தலை சிறந்தவற்றை அளிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட ஆற்றலும், வலிமையும் மிக்க எங்களது கலைஞர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.” என்றார் அவர். நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network-TPN) என்று சான்று பெற்றுள்ள PhantomFX நிறுவனத்திடம் தரப்படும் எந்தத் தயாரிப்பையும் ஆகச் சிறந்ததாக ஆக்கி அளித்து வருகிறோம். பாதுகாப்பான நம்பகமான கரங்களில் தயாரிப்புகள் ஏந்திக் கொள் ளப்படுகின்றன என்று பினு ஜோஷுவா கூறினார்.

தனிச்சிறப்புமிக்க தன்னுடைய பணிகளுக்காக PhantomFx நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்பினைப் பெற்றுள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவி லும் பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகைய விருது களில்,

• பாங்காக்கில் நடைபெற்ற 13ஆவது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் விரைவாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனத்திற்கான IAC Summit 2019 விருது.

• நிப்பான் பெயிண்ட் பொங்கல் விளம்பரத்திற்காக இந்தியப் பிரிவில்

• திரைப்படம் அல்லாத மிகச்சிறந்த தயாரிப்புக்கான FICCI BAF Awards 2020.

• விளம்பரத்தில் மிகச் சிறந்த காட்சிக்கலைக்கான VAM Awards 2021

நிப்பான் பெயிண்ட் மகிழ்ச்சியான பொங்கல் விளம்பரத்துக்கு. Dangerous என்ற திரைப்படத்திற்கு மிகச்சிறந்த காட்சிக்கலைக்கான (VFX) – VAM Awards 2022 ஆகிய பல விருதுகளும் அடங்கும்.

திரைப்பட, தொலைக்காட்சி உள்ளடக்கத் தயாரிப்பு முன்முயற்சிகளுக்கான உலகளாவிய அமைப்பான Motion Pictures Association of America (MPAA) என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்ற சான்றிதழை PhantomFX நிறுவனம் பெற்றுள்ளது என்று பினு ஜோஷ்வா கூறினார். PhantomFx நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு.ரஜினிகாந்த் கூறும் போது, இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPOவிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது. பங்குச்சந்தையின் மூலமாக கணிச மான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx தான் என்று அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!