நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘பதான்’ படத்தின் மூலம் ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘பதான்’.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான பேஷரம் ரங், ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது.
இந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சியில் காவி உடையில் நடிகை தீபிகா படுகோனே கவர்ச்சி நடனம் ஆடியதற்கு ஹிந்த அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.
இந்த நிலையில் அசாமில் உள்ள ஒரு தியேட்டரில் ஒட்டப்பட்ட பதான் பட போஸ்டரை கிழித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துக்களின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு ஷாருக்கானுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் தீபிகா படுகோனே ஆடியிருப்பதாக கூறி இந்து அமைப்புகள் விமர்சித்தன. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கும் வகையில் சில தலைவர்கள் பேசினர்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூட பதான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் சில பகுதிகளில் பதான் திரைப்படத்தை திரையிடக்கூடாது என தியேட்டர்களுக்கே சென்று இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்த சம்பவமும் நடைபெற்றது. அந்த வகையில் அசாமின் நரேங்கி பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பதான் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிங் கான்’ ‘பாலிவுட்டின் ராஜா’ ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக் கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்துக் கொண்டாடுகின்றனர்.
ஏற்கெனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.