யோகிபாபு காட்டில் மழை. தமிழில் உச்ச காமெடி நடிகராக வலம் வருகிறார். அவர் இல்லாத திரைப்படங்கள் தற்போது விற்பனை ஆவதில்லை. அதனாலேயே தமிழ் சினிமாவில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. யோகிபாபுவும் தன் பங்களிப்பாகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறார். அவருக்கு இரண்டாவதாக (தீபாவளிக்கு முன் நாள்) அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியில் இருக்கிறார் யோகிபாபு.
நகைச்சுவை நடிகராக மற்றும் இல்லாமல், தற்போது கதாநாயகனாகவும் களம் இறங்கியுள்ளார்.
2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு முப்பது படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ரமேஷ் சுப்ரமணியம் இயக்கவுள்ளார்.
தமிழக அரசு 2021ம் ஆண்டு ‘கலைமாமணி’ பட்டமளித்து கௌரவிக்கபட்ட யோகி பாபுவிற்கு, 2022 அக்டோபர் 23ம் தேதி காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவருக்கு கடந்த 2020 ஆண்டு, மஞ்சு பார்கவியுடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. ஏற்கெனவே, இவர்களுக்கு விஷாகன் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்பொழுது இரண்டாவதாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகர செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இனிப்பான தீபாவளிச் செய்தியாக அமைந்துள்ளது.