ரஜினி நடித்த ‘பாபா’ டிஜிட்டல் வடிவில் திரையிடல்

1 0
Spread the love
Read Time:4 Minute, 59 Second

ரசிகர்களுக்காக ரஜினி நடித்த பாபா திரைப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மறு வெளியீடு செய்யவிருக்கிறார்கள். 
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான பாட்ஷா இன்றுவரை ரஜினியின் திரை இமேஜை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று பல முறை ரஜினியிடம் கேட்கப்பட்டபோதும் அவர் “எப்போதுமே ஒரு பாட்ஷாதான்” எனச் சிரித்துவிட்டுச் சென்றுவிட்டார். பாட்ஷாவை மீறி இன்னொரு வெற்றியோ இன்னொரு பாட்ஷாவே வந்துவிடாது என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறார் ரஜினி என்பது தெளிவு.

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது…

அப்படிப்பட்ட இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்த சிறந்த திரைக்கதை, இயக்கத்தில் முத்திரை பதித்தவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, ரஜினி ஆசை ஆசையாகத் தயாரித்து நடித்த படம்தான் பாபா. 2002ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ‘பாபா’ படத்திற்கு அவரே கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே தயாரித்தும் இருந்தார்.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாகப் பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக்க கொண்டு எடுக்கப்பட்ட படம் பாபா. இந்தப் படம் வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்குத் தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீனத் தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும்கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.
விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. ரசிகர்களும் ஆன்மிக அன்பர்களும் புதிய வடிவில் வரும் பாபாவைக் காண ஆவரோடு காத்திருக்கிறர்கள். நாமும்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!