சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும், ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. இதை விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் எழுதி, இயக்குகிறார். ‘பீஸ்ட்’ படதோல்வி அடைந்ததற்குப் பிறகு நெல்சனை வைத்து ஜெயிலரை எடுக்கலாமா என்று யோசிக்கப்பட்டது. ஆனால் ரஜினி நெல்சன் பெயர் அறிமுகப்படுத்தியாகிவிட்டது. இப்போது நெல்சனை மாற்றினால் அவர் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். அதனால் அவரே இயக்கட்டும். கதை, திரைக்கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடமும் சுரேஷ் கிருஷ்ணாவிடமும் மேற்பார்வை காட்டிச் சரி பார்த்துவிட்டு நெல்சனையே இயக்கச் செய்யலாம் என்று அறிவுரை கூறி தற்போது ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.
ஜெயிலரை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் 2023 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரத்தின் புதிய அறிமுகத்தையும் ரஜினிகாந்துடன் சிவராஜின் முதல் திரை ஒத்துழைப்பையும் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக அமைந்தாலும், பிரபல நடிகர்கள் ஒருங்கிணைத்தாலும் அவரது கடைசித் திரைப்படங்களில் இது என்று விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெறாமல் போகலாம். அதனால் இந்தப் படம் தோல்வியடைந்தால் அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் இது எனக் கருதமுடியாது. ஏனென்றால் ரஜினையை வைத்து தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.
‘ஜெயிலர்’ படத்தில் அவரது முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ ஏறகெனவே வெளியாகி பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
டிரைலரில் விஜய் கார்த்திக் கண்ணன் லென்சில் ரம்மியமான கேமரா கோணங்களில் ரஜினியின் இன்ட்ரோ, ஸ்டைலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் அனிருத்தின் பின்னணி இசை ஒலிக்க, பட்டாக்கத்தியை கையிலெடுக்கும் ரஜினியின் க்ளோசப் ஷாட்டுடன் வீடியோ நிறைவடைகிறது.
ரஜினியின் இந்தப் பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆண்டுக்கு ஒன்றாக வெளியாகலாம்.