மீண்டும் டெரர் வில்லனாகிறார் சத்யராஜ் || அங்காரகன் படத்தில்

1 0
Spread the love
Read Time:3 Minute, 23 Second

குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கும் சத்யராஜ் தற்போது மீண்டும் ஒரு படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகப் பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகக் களமிறங்கியுள்ளார்.

இந்தப் படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக  பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து ‘லாயர் விஸ்வநாத்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் இந்தப் படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

அங்காரகன் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனக் கூறியுள்ளார் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் S.கிறிஸ்டி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!